உலக கோப்பை 2023 போட்டியானது தொடங்க இனமும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மிகவும் பிரமாதமாக நடந்து வருகிறது. மேலும் இந்த போட்டியில் வெற்றியடைந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வருகிறது. ஏனென்றால் இந்த உலக கோப்பை போட்டியானது முழுக்க முழுக்க இந்தியாவில் நடப்பதினால் இந்தியாவிற்கு சுலபமாக இருந்தாலும் அழுத்தம் என்பது மிகவும் அதிகமாகவே இருந்து வருகிறது.

இதனால் இந்திய அணி இந்த அழுத்தம் மிகுந்த போட்டிக்கு தங்களை தயார் படுத்த வருகிறது. மேலும் காயம் அடைந்த வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களையும் இந்தியா தேர்வு செய்ய ஆரம்பித்து விட்டது. சொல்லப்போனால் வரும் 4 மாதங்கள் இந்தியா பலவிதமான போட்டிங்களில் கலந்து கொள்ள இருக்கிறது. இதனால் வீரர்களின் பணிசுமையை தவிர்க்க சில வீரர்களுக்கு சில போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சமயத்தை பயன்படுத்தி அந்த இடத்தில் வீரர்களை இந்தியா பரிசோதனை செய்து வருகிறது. குறிப்பாக விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனையும், 4வது இடத்தில் திலக் வர்மாவையும் பரிசோதனை செய்கிறது. ஆனால் பினிஷிங் ரோலில் யார் களமிறங்குவார் என்ற கேள்வியானது தற்போது எழுந்ததுள்ளது. அப்படிப்பட்ட நிலையில் தான் இந்த இடத்திற்கு சரியாக இருக்கும் வீரர் குறித்து பேசியுள்ளார் முன்னாள் வீரரான அபிஷேக் நாயர்.

அந்த விஷயத்தை சாதிக்க பல வீரர்கள் உள்ளனர். ஐபிஎல் 16வது சீசனில் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கான ஃபினிஷராக சிறப்பாக விளையாடிய ரிங்கு சிங், உள்நாட்டு கிரிக்கெட்டிலும் அந்த விஷியத்தை சிறப்பாகவே செய்துள்ளார். ஆனால் என் கருத்துப்படி அவருக்கு இன்னும் சிறிது நேரம் தேவைப்படும். மேலும் அவருக்கு நீண்ட அனுபவமும் தேவைப்படுகிறது. எனவே அவருக்கு ஆதரவளிக்கப்பட வேண்டும்.
சொல்லப்போனால் ஒரு கிரிக்கெட் அணியின் பினிஷராக இருப்பது எனப்து மிகவும் கடினமானது, அந்த பொறுப்பை ஏற்கும் போது வெற்றியை விட தோல்விகளையே சந்திக்க நேரிடும். அதற்கு நிறைய அனுபவம் தேவை. சமீப காலத்தில் திலக் வர்மா தனது திறமையை நிரூபித்து 4வது இடத்தில் அசத்தியுள்ளார். எனவே போட்டியில் பினிஷிங் வீரராக நான் எந்த பாரபட்சமும் இல்லாமல் ரிங்கு சிங்கே சரியாக இருப்பார் என்று சொல்கிறேன்.

இந்த இந்தியக் குழந்தை இந்தியாவிற்காக ஒரு சிறப்பான ஃபினிஷராக சிறப்பாகச் செயல்படுவதை நான் பார்த்திருக்கிறேன். உள்ளே சென்று தொடர்ந்து பெரிய சிக்ஸர்களை அடிக்கும் இவரின் தனிதிறமை அவருக்கு இருக்கிறது. அவர் மிகப்பெரிய ஆட்டக்காரர்களில் ஒருவர் கிடையாது, ஆனாலும் அந்த பினிஷிங் ரோலை அவரால் சரியாக செய்ய முடியும். ஆனால் அவருக்கு ஆதரவளித்தது போட்டிகளில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றார் அபிஷேக் நாயர்.




