இந்திய அணி இந்த வருடம் அமேரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறும் உலகக்கோப்பை 2024க்காக இளம் வீரர்களை தயார் படுத்தி வருகிறது. அதற்க்கு முதற்கட்டமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 T20 தொடர்களை இந்தியாவில் விளையாட உள்ளது. அதில் இன்றுஇரண்டாவது போட்டி இந்தூர் நடைபெற்றது. இந்த தொடருக்கு இந்திய அணியின் முன்னனி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா 14 மாதங்களுக்கு பின் T20 இந்திய அணியில் அவர் இணைந்துள்ளார்.இந்திய அணி இரண்டாவது போட்டியை இன்று விளையாடி இருந்தது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பௌலிங்கை தேர்வு செய்து இருந்தார்.

ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை மட்டுமே அடித்து இருந்தார்கள். அதில் அதிகபட்சமாக குல்பாடின் 57 ரன்களையும் நஜிபுல்லா 23 ரன்களையும் மற்றும் முஜீப் 21 ரன்களை மட்டுமே அடித்து இருந்தனர். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளையும் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் ஷிவம் துபே 1 விக்கெட்டையும் அவர் வீழ்த்தி இருந்தனர்.
அதன் பின் 173 ரன்களை இலக்காகக்கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்தில் பெரும் அடியாக விழந்தது கேப்டன் ரோஹித் ஷர்மாவின் ஆட்டமிழப்பு தான். இந்திய அணி 5 ரன்களை இருக்கும் போது கேப்டன் ரோஹித் ஷர்மா முதல் பதில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் ஜெய்ஸ்வால் ஷிவம் துபே மற்றும் விராட் கோழியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் இந்திய அணியின் அதிகபட்சமாக ஷிவம் துபே 63 ரன்களும் ஜெயஸ்வால் ரன்களும் விராட் கோலி ரன்களையும் அடித்து இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் கரீம் ஜனத் 2 விக்கெட்டுகளையும், நவீன்-உல்-ஹக் மற்றும் ஃபசல்ஹாக் ஃபாரூக்கி தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். ஷிவம் துபே தனக்கு கிடைத்த அற்புதமான வாய்ப்புகளை அவர் சிறப்பாகவே பயன்படுத்தி வருகிறார். முதல் போட்டியில் 60 ரன்களும் இந்த போட்டியில் 63 அடித்து கிடைத்த வாய்ப்புகளையும் அவர் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார்.இந்த போட்டி குறித்து ஷிவம் துபே கூறுகையில்,
எனது ஆட்டத்தில் கேப்டன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக நினைக்கிறேன். நாங்கள் இருவரும் (ஜெய்ஸ்வால் மற்றும் துபே) ஸ்ட்ரோக் வீரர்கள். அவர் நன்றாக பேட்டிங் செய்தார்.நாங்கள் இருவரும் போட்டியை முடிக்க திட்டம் போட்டு இருந்தோம். நாங்கள் சரியான நேரத்தில் முடித்துவிட்டோம்! நான் உழைத்த பல விஷயங்கள் உள்ளன. இது திறமையைப் பற்றியது அல்ல. ஒவ்வொரு பந்திலும் கவனம் செலுத்துவது முக்கியம். எனது பந்துவீச்சிலும் பணியாற்றி வருகிறேன்.

கடைசி போட்டி நன்றாக இருந்தது; இந்தப் போட்டி எனது பந்துவீச்சில் இல்லை. ஆனால் டி20 அப்படித்தான். எனது வெற்றியின் பெருமை எம்எஸ் தோனிக்கும், சிஎஸ்கேக்கும் செல்கிறது. என்னால் அதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை மஹி பாய் எனக்குக் கொடுத்தார், சிஎஸ்கே நிர்வாகம் என்னிடம் அவர்கள் என்னை நம்புகிறார்கள் என்றும் என்னால் செயல்பட முடியும் என்ற நம்பிக்கை எப்போதும் இருப்பதாகவும் அவர் கூறினார்.





