
இந்திய அணி இறுதிப் போட்டியின் தோல்விக்குப் பிறகு அடுத்த வருடம் நடக்கவிருக்கும் டி20 உலக கோப்பை போட்டிருக்க இந்திய அணி வீரர்களை இளம் வீரர்களை தயார் செய்து வருகிறது. அதற்கு முதற்கட்டமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து தொடர்களை கொண்ட டி20 போட்டியில் இந்திய அணி 4-1 என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று வடிவ கிரிக்கெட்டுகளையும் விளையாட உள்ளது அதில் முதல் கட்டமாக டி20 போட்டியானது 1 – 1 வித்தியாசத்தில் சமம் செய்தது.

தென் ஆப்பிரிக்கா அணியின் சார்பாக அதிகபட்சமாக ஆண்டிலே பஹ்லுகுவாயோ அவர் 33 ரன்களும் டோனி டி ஜோர்ஜி 28 ரன்களுக்கும் மார்க்கம் 12 ரன்களை மட்டுமே அடித்திருந்தனர். எனவே தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்க்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 27.3 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களை மட்டுமே அடித்திருந்தது. இது தான் தென்னாப்பிரிக்கா அணி தென்னாப்பிரிக்கா மைதானத்தில் குறைந்த பட்ச ஸ்கோர் இதுவே ஆகும்.
இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அற்புதமாக பந்து வீசியிருந்தனர். அர்ஷ்தீப் சிங் ஒரு நாள் போட்டியில் நேற்று தான் முதல் விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர். இந்த போட்டியில் அவர் ஐந்து விக்கெட்களையும் ஆவேஷ் கான் நான்கு விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். 117 ரன்கள் இலக்காகக் கொண்ட களமிறங்கிய இந்திய அந்த இலக்கை 16.4 ஓவரில் எளிதாக விட்டு வெற்றி பெற்றது.

இதிலிருந்து அணியின் அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த அறிமுக வீரராக சாய் சுதர்ஷன் 55 ரன்கள் ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்களும் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்னையும் எடுத்திருந்தனர். எனவே இந்திய அணி 16.4 ஓவர்களில் இரண்டு விக்கெட் மட்டுமே இழந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் இருக்கின்றது.
இந்த வெற்றியின் மூலம் கேப்டனாக கே.எல்.ராகுல் தொடர்ச்சியாக 10 சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்கு அவர் வெற்றியை தேடி தந்துள்ளார். இதன் மூலம் அவர் எம்.எஸ்.தோனியின் சாதனயையான 9 சர்வதேச போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ள சாதனையை அவர் முறியடித்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியை உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை தோல்வியை தழுவாமல் கேப்டன் ரோஹித் ஷர்மா தான் முதல் இடத்தில் இருந்து வருகிறார்.

கேப்டனாக தொடர்ச்சியான வெற்றிகள்:
1) 19 போட்டிகள் – ரோஹித் ஷர்மா
2) 12 போட்டிகள் – ரோஹித் ஷர்மா
3) 12 போட்டிகள் – விராட் கோலி
4) 10 போட்டிகள் – ரோஹித் ஷர்மா
5) 10 போட்டிகள் – KL ராகுல்
6) 9 போட்டிகள் – MS தோனி





