இந்திய அணியானது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் தற்போது இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் 1 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றவுள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் 3 வது போட்டியில் தொடக்க வீரர்கள் தடுமாறிய நிலையில் திலக் வர்மா மற்றும் சூரிய குமார் யாதவ் இருவதும் இணைத்து சிறப்பாக விளையாடினார்கள்.

இந்நிலையில் ப்ளோரிடாவில் இன்று நடந்து முக்கியமான 4வது போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது. ஏனெனென்றல் ஆடுகளமானது பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்பட்டது. அதனால் 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 178/8 ரன்களை விளாசியது. இதனையடுத்து 179 என்ற இலக்கை துரத்த களமிறங்கிய இந்திய அணிக்கு இந்த போட்டியில் வெற்றியடைந்தே ஆகவேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் அந்த அழுத்திலும் தொடக்க வீரர்களுக்காக கமிறங்கிய யசஸ்வி ஜெய்ஸ்வால் – சுப்மன் கில் ஆகியோர் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி விரைவாக ரன்களை சேர்த்தனர்.
கடந்த அறிமுகப்போட்டியில் விளையாடிய ஜெய்ஸ்வால் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் இம்முறை பந்துகளை அணைத்து புறமும் பறக்க விட்டார். மறுபுறம் கடந்த போட்டியில் சொதப்பிய சுப்மன் கில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாக விளையாடினார். இடஙக இளம் தொடக்க வீரர்கள் ஜோடி சேர்ந்து 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அவுட்டாகாமல் அடப்பிடித்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர்.

மேலும் 84(51) ரன்களை விளாசிய ஜெய்ஸ்வாலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது சுப்மன் கில்லும் தன் மீதான விமர்சனகளுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் தான் போட்டிக்கு பிறகு பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் சுப்மன் கில் குறித்தும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் குறித்தும் பேசியிருந்தார்.
இந்த மைதானத்தில் பெரிய எண்ணிக்கையில் இந்திய ரசிகர்கள் வந்து எங்களுக்கு ஆதரவினை அளித்தனர். அவர்கள் கொடுத்த ஆதரவு எங்களை மிகச் சிறப்பாக செயல்பட வைத்தது. இந்திய அணியில் துவக்க வீரர்களான சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வாலின் திறமை மீது எனக்கு எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இந்த போட்டியிலும் பேட்ஸ்மேன்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாடினர். பேட்ஸ்மேன்கள் இவ்வாறு விளையாடுவது பந்து வீச்சாளர்களுக்கும் பெரிய அளவில் உதவியைத் தரும்.

அதோடு பந்துவீச்சாளர்கள் எப்போதுமே போட்டியை வெற்றி பெற்று தரக்கூடியவர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். ஏனெனில் போட்டியின் ஆரம்பத்தில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்து விட்டால் போட்டி நம்முடைய கைகளுக்கு வரும். இந்த போட்டியில் சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது என இந்திய அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா பேசியது குறிப்பிடத்தக்கது.




