இந்திய அணியானது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் தற்போது இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் 1 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றவுள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் 3 வது போட்டியில் தொடக்க வீரர்கள் தடுமாறிய நிலையில் திலக் வர்மா மற்றும் சூரிய குமார் யாதவ் இருவதும் இணைத்து சிறப்பாக விளையாடினார்கள்.

இதனால் இந்தியா வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த போட்டியில் அதாவது 18 வது ஓவரில் 5வது பந்தில் சிங்கிள் எடுத்தால் இந்தியாவின் ஸ்கோர் 158/3 என்ற நிலைமைக்கு வரும் என்பதால் கடைசிப் பந்தில் சிங்கிள் அல்லது பவுண்டரி அடித்து திலக் வர்மா அரை சதத்தையும் விளாசுவர் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அந்த அந்த பந்தில் ஹர்திக் பாண்டியா 5வது சிக்ஸர் அடித்து போட்டியை முடித்து வைத்தார்.
இதனால் கோபமடைந்த ரசிகர்கள் கடந்த 2 போட்டிகளில் இரு கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் சொதப்பி விட்டு தற்போது ஒரு இளம் வீரர் போராடி அரை சதம் அடிக்கும் நேரத்தில் இப்படி செய்தது நியாயமான என்று ஹர்திக் பாண்டியவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வரும் இந்த நிலையில் வீடியோ ஒன்றும் வெளியாகி இருந்தது. அந்த விடியோ பதிவில் “நீ கடைசி வரை நின்று போட்டியை ஃபினிஷிங் செய்ய வேண்டும். எத்தனை பந்துகளை எதிர்கொண்டாய் என்பது வித்தியாசத்தை ஏற்படுத்தும்” என்று இந்தியில் திலக் வர்மாவிடம் ஹர்திக் பாண்டியா தெரிவித்தது ஸ்டம்ப் மைக்கில் தெளிவாக பதிவானது.

இதிலிருந்து தெரிகிறது திலக் வர்மாவிடம் பினிஷ் செய்ய சொல்கிறார் என்று. இதனை நம்பிக்கொண்டிருந்த திலக் வர்மாவுக்கு அதிற்சி கொடுக்கும் வகையில் 2 ரன் தேவைப்படும் நேரார்த்தில் சிக்ஸர் அடித்து ஹர்திக் பாண்டியாவே பினிசிங் செய்தார். இதனால் இளம் வீரரரை நம்பவைத்து ஏமாற்றி விட்டதாக நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல வர்ணனையாளரான ஹர்சா போக்லே தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றி இட்டுள்ளார். அந்த பதிவில் “திலக் வர்மா அரை சதம் அடித்ததை தவற விட்ட விவகாரத்தில் நான் கொஞ்சம் குழப்பமடித்தேன் என்று சொல்லலாம். பொதுவாக டி20 கிரிக்கெட்டில் சதம் அடிப்பதை தவிர வேறு எதுவும் பெரிய விஷயம் கிடையாது. எனவே அரை சதம் என்பது பெரிய மயில் கல் கிடையாது (அதாவது சதம் அடிப்பது என்பது டி20 போட்டியில் மிகவும் கடினம்).
I am puzzled by the discussion around Tilak Varma missing out on a 50. It isn't a landmark, in fact other than a century (which is rare), there are no landmarks in T20 cricket. We are far too obsessed with individual achievement within a team sport. I don't believe 50s should be…
— Harsha Bhogle (@bhogleharsha) August 10, 2023
ஆனால் நாம் ஒரு அணியாக விளையாடும் விளையாட்டில் தனிப்பட்ட ஒருவரின் மீது புள்ளிவிவர சாதனைகள் மீது மிகவும் வெறித்தனமாக இருக்கிறோம். இப்படி வெறித்தனமாக இருப்பதும், தனிபட்ட ஒருவர் புள்ளி விபரத்திற்காக 50 அடிக்க வேண்டும் என்பதை நான் ஒன்றும் நம்பவில்லை. அதிக ரன்களை நல்ல ஸ்ட்ராக் ரேட்டிலும், சராசையிலும் அடிப்பதே முக்கியம் என்று பதிவிட்டிருந்தார் வர்ணனையாளர் ஹர்சா போக்லே.




