
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான ஐந்து போட்டிகளைக் கொண்ட T20 தொடர்களை விளையாடி வருகின்றது. இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு ஈடு கட்டும் வகையில் இந்திய அணி இந்த போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. அதில் மூன்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இறண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டும் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் இந்திய நேற்றைய போட்டியில் தோல்வியை தழுவியது . தொடர் ஆனது அசாம் மாநிலத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் வேட் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கட்டுகளை மட்டுமே எழுந்து 222 ரன்களை குவித்தது.

223 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் இருந்து தடுமாற்றத்தை சந்தித்து வந்தாலும் இறுதி வரை போராடி ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவு 5 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்களை குவித்து இந்திய அணியை வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 104 ரன்களுக்கும் ஹெட் 35 ரன்களும் வேட் 28 ரன்களை குவித்திருந்தனர்.
எனவே ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ருதுராஜ் கெய்க்வாட் விளையாட்டு குறித்து பேசிய முன்னாள் இந்திய அணியின் வீரர் நெஹரா கூறுகையில் ருதுராஜ் கெய்க்வாட் என்ன மாதிரியான வீரர் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் ஜெய்ஸ்வால் அதற்கு எதிரானவர். டி20 தொடரை பொறுத்தவரைக்கும் நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாட வேண்டும்.

ருதுராஜ் அதை சிறப்பாக செய்கின்றார். அவர் இந்திய அணிக்காக மூன்று வடிவங்களிலும் விளையாடும் வீரராக இருப்பார். அவரின் ஆட்டம் நிச்சயமாக ஆச்சரியமாக ஒன்றுதான். அவரின் சாதனை மிகச்சிறந்ததாக இருந்தது ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட் சிறப்பாக ஆடியோ தற்போது t20 போட்டியிலும் சதம் அடித்து தன்னை நிரூபித்து கொண்டுள்ளார். எனவே தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட்டை அணியில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.





