இந்திய அணியின் முக்கிய வீரரான சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் இந்திய அணியில் சேர்ந்தது முதலே சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளை எடுத்து கொடுப்பார். மேலும் ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணிக்கு ஒரு முக்கிய பந்துவீச்சாளரா இருந்து வந்தார் சாஹல். கடந்த ஜூன் 11, 2016 அன்று ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் ஜிம்பாப்வேக்கு எதிராக ஒருநாள் சர்வதேச அறிமுகமானார் யுஸ்வேந்திர சாஹல்.
சாஹல் இந்தியாவிற்காக அறிமுகத்திலிருந்து வெள்ளை பந்து விளையாடியில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் 27.13 சராசரியில் 121 விக்கெட்டுகளையும், 50 ஓவர் வடிவத்தில் 5.26 என்ற பொருளாதார வீதத்தையும் வைத்துள்ளார். 76 டி20 போட்டிகளில் 8.14 என்ற பொருளாதார விகிதத்தில் 93 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும் சஹார் கடைசியாக ஜனவரி 2023 இல் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்றார்.
இந்நிலையில் தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக விளையாடிவரும் அணியில் சாஹல் இடம்பிடித்துளார். இந்த தொடரில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் டி20 தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் தான் இந்த போட்டியின் போது ஒரு அற்புதத்தை நிகழ்த்தினார் சாஹல், அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Chahal changes the game around in 3 balls.
— FanCode (@FanCode) August 3, 2023
.
.#INDvWIAdFreeonFanCode #WIvIND pic.twitter.com/6ltlUhqH0q
அதாவது இந்த போட்டியில் முதல் டாஸை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. மேலும் தொடக்கத்தில் மிகவும் சிறப்பாகவே வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரட்ர்ல் விளையாடினார்கள் குறிப்பாக பிராண்டன் கிங் 18 பந்துகளில் 28 ரன்களை 4வது ஓவரின் முடிவில் விளாசியிருந்தார். மேலும் கையில் மேயர்ஸ் அவருக்கு துணையாக இருந்தார். இதனால் அங்கு பார்ட்னர்ஷிப் உருவாக்கியது.
Yuzvendra Chahal sends both the openers back to the pavilion in a single over! 💥
— OneCricket (@OneCricketApp) August 3, 2023
A perfect start for him 👌#yuzvendrachahal #WIvIND #TeamIndia pic.twitter.com/fGbxREoCJ8
இந்நிலையில் இந்த போயட்டியில் 5வது ஓவரி வீச வந்த யூசுவேந்திர சாஹல் தன்னுடைய முதல் பந்திலேயே கையில் மேயர்ஸ் விக்கெட்யை வீழ்த்தினார். அதனையடுத்து 3 வது பந்தில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த பிரண்டன் கிங் விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் பார்ட்னாஷிப் உடைந்தது, மேலும் யூசுவேந்திர சாஹல் இன்னமும் 7 விக்கெட்டுகளை மட்டுமே சர்வதேச டி20 தொடரில் வீழ்த்தினார் என்றார் சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார் சாஹல்.

மேலும் இன்னமும் 4 போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில் இந்த தொடரிலேயே யூசுவேந்திர சாஹல் அந்த சாதனையை படைப்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் முதல் இன்னிங்கில் 6 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது 149 ரன்களை விளாச, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா இந்த செய்தியை எழுதும் வரையில் 2 விக்கெட்டுகளை இழந்து 10வது ஓவரில் 70ரன்களை எடுத்துள்ளது.





