முன்னர் போல இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியை போலவே தற்போது மகளீர் கிரிக்கெட் அணிக்கும் ரசிகர்களின் ஆதரவு சமீப காலத்தில் அதிகரித்து வருகிறது. இதனிடையே இந்திய மகளீர் அணியும் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்று வருகிறது. இதனிடையே தான் இந்திய மகளீர் அணியானது வங்காள தேசத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளை விளையாட இருக்கிறது.

இந்நிலையில் கடந்த ஜூலை 9 ஆம் தேதி தொடங்கிய 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய மகளீர் அணி 22 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் 7 விக்கெட்டுகள் வித்தியாசம் என சுலபமாக வென்றது. இதனையடுத்து 3வது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. ஆனால் அது மிகவும் தவறான முடிவு என்று பின்னர் தான் தெரிந்தது.
ஏனென்றால் தொடக்கத்தில் சிறப்பாக விளையானாலும் 13 ரன்களில் ஸ்மிருதி மந்தனாவும் 19 ரன்களில் ஷபாலி வர்மாவும் ஆட்டமிழந்தார். இவர்களை தொடர்ந்து வந்த கேப்டன் ஹர்மன்பிரீத் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானார். இதனால் அதிக முறை டக் அவுட்டான வீராங்கனை என்ற மோசமான சாதனையை படித்தார் ஹர்மன்பிரீத். இந்நிலையில் கேப்டனை இழந்த இந்தியா அணியினால் வங்காள தேசத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை.

ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிகஸ், யாஸ்டிக்கா பாட்டியா பபோன்ற நட்சத்திர வீராங்கணைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுக்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 95 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான சாதனையை படைத்தது. இதனையடுத்து இந்த குறைவான ரன் தேவைப்படும் போட்டியில் சுலபமாக வெற்றி பெற்றுவிடும் என்று நினைத்த வங்காளதேச அணிக்கு காத்திருந்த்து பெரிய அதிர்ச்சி.
ஏனென்றால் வங்காளதேசத்தில் தொடக்க வீராங்கனைகளான ஷமீமா சுல்தானா மற்றும் ஷாதி ராணி இருவரும் முறையே 5 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். இதனையடுத்து வந்த முர்ஷிதா 4 ரன்களில் ஆட்டமிழக்க வங்காள அணியின் கேப்டன் நிஹார சுல்தானா மட்டுமே உறுதியாக நின்று 55 பந்துகளில் 38 ரன்கள் அடுத்த போதிலும் மற்ற எந்த வீரர்களும் சரியாக விளையாடததால் வங்காள அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் இந்திய அணியின் ஷபாலி ஷர்மா கடைசி ஒரு 1 ஓவரில் 1 ரன் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருந்த போதிலும் முக்கியமான விக்கெட்டுகளையும் 4 ஓவர்களில் 12 ரன் மட்டுமே கொடுத்த 3 விக்கெட்டுகளை வீழ்த்தியா தீப்தி ஷர்மா ஆட்டநாயகி விருதை பெற்றார். மேலும் இந்த போட்டியின் மூலம் வங்களாதேச சுற்றுப்பயணத்தில் டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது இந்தியா.




