சர்வதேச கிரிக்கெட்டில் 13ஆவது உலகக்கோப்பை போட்டியானது வரும் ஆக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற இருக்கிறது.இந்தியாவில் நடக்கும் இந்த உலகக்கோப்பை போட்டியில் நடப்பு சம்பியன்களான இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, ஐயர்லாந்து உள்ளிட்ட நாடுளை தேர்ந்த அணிகள் களமிறங்குகிறது.

மற்ற உலகக்கோப்பை போட்டிகளையும் போல இந்த உலகக்கோப்பை போட்டியும் அணைத்து அணிகளுக்கு கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. இருந்த போதிலும் கடந்த காலத்தில் இருந்த இந்திய அணியின் பலம் தற்போது இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த 2011 உலக கோப்பையில் கௌதம் கம்பீர், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா போன்ற இடதுகை வீரர்கள் வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.
மேலும் அந்த பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் பந்துவீச்சார்ளில் சில நேரங்களில் திணறும் போது எதிரணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், சௌரவ் கங்குலி, சுரேஷ் ரெய்னா போன்ற ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேன்கள் முதன்மை பவுலர்கள் தடுமாறும் போது பகுதி நேர பவுலர்களாக மாறி கணிசமான ஓவர்கள் வீசி முக்கிய விக்கெட்டுகளை எடுத்தனர். ஆனால் அந்த நிலைமை தற்போது இல்லை என்றே சொல்லலாம்.

தற்போது உள்ள அணியில் பேட்ஸ்மேன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீசுவர், அவர் சில விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அவரை தவிர்த்து விராட் எப்போதாவது அரிதாக பந்துவீசுவார். இந்த நிலையில் தான் தற்போது புதிய பேட்மேன்ஸ்களை தேடி வரும் இந்திய அணியில் பகுதி நேரே பந்து வீச்சர்களை சேர்க்க இந்திய அணி ஆர்வம் காட்டி வருகிறது. மேலும் அதன் முதன் படியாக திலக் வர்மா மற்றும் யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விஷயம் குறித்து பேசிய இந்திய அணியின் பவுலிங் கோச் கூறுகையில் “நமக்கு யாராவது சில ஓவர்களை வீசினால் நன்றாக இருக்கும. அந்த வகையில் யசஸ்வி மற்றும் திலக் வர்மா ஆகியோர் அண்டர்-19 அளவிலிருந்து பந்து வீசுவதை நான் பார்த்துள்ளேன். எனவே அது போன்ற திறைமைகளை அவர்கள் கொண்டிருப்பது நமக்கு நல்ல சாதகத்தை ஏற்படுத்தும். தற்போது அதற்கான வேலைகளை நாங்கள் துவங்கியுள்ளதால் விரைவில் அவர்கள் பந்து வீசுவதை நம்மால் பார்க்க முடியும்.

இருப்பினும் அதற்கு நேரம் ஆகலாம். ஆனாலும் விரைவில் அவர்கள் குறைந்தது ஒரு ஓவரையாவது வீசுவதை பார்க்க முடியும் என்று கூறினார். இந்நிலையில் கடந்த 2020 U-19 உலகக்கோப்பையில் ஃபைனல் வரை சென்ற இந்திய அணியின் ஜெய்ஸ்வால், திலக் வர்மா போன்றோர் பகுதி நேர பவுலர்களாக இருந்தார். எனவே இவர் பந்து வீச்சினால் எதிர்கால இந்தியா அணிக்கு நல்ல துணையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.




