மேற்கிந்திய தீவுகளுக்கு இந்திய அணியானது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த பயணத்தில் இந்தியா பல தொடர் கொண்ட போட்டிங்களில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் பெட்ரா அற்புதமான வெற்றிக்கு பிறகு ஒருநாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கியது.

இந்த போட்டியில் முதல் டாஸை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. மேலும் தொடக்கத்தில் மிகவும் சிறப்பாகவே வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரட்ர்ல் விளையாடினார்கள் குறிப்பாக பிராண்டன் கிங் 18 பந்துகளில் 28 ரன்களை 4வது ஓவரின் முடிவில் விளாசியிருந்தார். மேலும் கையில் மேயர்ஸ் அவருக்கு துணையாக இருந்தார். இதனால் அங்கு பார்ட்னர்ஷிப் உருவாக்கியது.
ஆனால் 4வது ஓவரில் சாஹல் இவர்கள் இருவரின் விக்கெட்டுகளையும் எடுத்தார். இதனையடுத்து வந்த சார்லஸ் 3(6) ரன்களில் ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் அணியானது தடுமாறியது. அணியில் சிறப்பாக விளையாடிய பூரன் 41(33) ரன்களை விளாசினார். அதற்கு பிறகு வந்த ஹெட்மயருடன் கைகோர்த்த ரோவ்மேன் பவல் அற்புதமாக விளையாடி ரன்களை சேர்த்தாலும் அரை சதம் அடிக்காமலேயே 48(32) ரன்களில் ஆட்டமிழக்க, ஹெட்மயயர் விக்கெட்டியும் ஒரே ஓவரில் வீழ்த்தி அசத்தினார் அர்ஷ்தீப் சிங்.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை குவித்தது. இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய தொடக்கத்திலேயே சொதப்பியது. ஐபிஎல் அதிரடி வீரர்களான சுப்மன் கில் 3(9) ரங்களிலும் இஷான் கிஷான் 2(5) ரன்களிலும் ஆட்டமிழந்தார். இதனால் ஆரம்பத்திலேயே இந்திய அணி தடுமாறியது.

இதனையடுத்து சூரிய குமார் யாதவ் மற்றும் திலக் வர்மா கைகோர்த்து ரன்களை குவித்தாலும் அவசரப்பட்டு சூரிய 21(21) ரன்களில் ஆட்டமிழந்தார்.அவரை தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே அற்புதமாக விளையாடிய திலக் வர்மா 39(22) ரன்களில் ஆட்டமிழந்தார். இதற்கு பிறகுதான் இந்திய அணியின் சரிவு தொடங்கியது. கேப்டன் ஹர்திக் பாண்டியா 19(19) ரன்களிலும் சஞ்சு சாம்சன் அதே ஓவரில் 12(12) ரன்களில் எடுத்திருந்த நிலையில் ஹோல்டரிடம் ஆட்டமிழந்தார்கள்.

பின்னர் வந்த ஆக்ஸர் படேல் போட்டியை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சி செய்தாலும் 12 பந்துகளில் 21 ரன்கள் தேவைப்படும் நிலையில் அவர் 13( 11) ரன்களுக்கு ஆட்டமிழந்தார், ஆனால் அதிர்ச்சியூட்டும் விஷயமாக அர்ஷ்தீப் சிங் 2 போர்களை தொடர்ந்து அடித்து அழுத்தத்தை குறைத்தார். இதனால் கடைசி ஓவரில் 10 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ் அணி. இதன் மூலம் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றவுள்ளார் வெஸ்ட் இண்டீஸ்.





