இந்திய அணியானது அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் சில வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட நிலையில் காயத்திலிருது திரும்பி வந்துள்ள பும்ராவிற்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. பும்ரா கடந்த வருடம் முதுகில் ஒரு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டு அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார்.

அதனை தொடர்ந்து பும்ரா பயிற்சி எடுத்து வந்த நிலையில் தான் மீண்டும் தனது பழைய நிலைமைக்கு திரும்ப கடுமையாக உழைத்த நிலையில் தான் வரும் உலக கோப்பைக்கு முன்னதாக அயர்லாந்து தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு தேர்வாளர்கள் பும்ராவை சோதனை செய்ய இருக்கின்றனர். அங்கு மூன்று டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் பும்ராவின் செயல்பாடு பொறுத்தே உலக கோப்பையில் அவர் இடம்பெறுவாரா மாட்டாரா என்பது தெரியும்.
மேலும் அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது 3 டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கும் நிலையில். இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் ஜஸ்பிரீத் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிட்டத்தட்ட ஓராண்டாக எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வரும் அவர் எவ்வாறு இந்த தொடரில் பந்து வீசப்போகிறார் என்பதை பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்று நடந்து முடிந்த முதல் இந்தியா vs அயர்லாந்து போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் பும்ரா தனனுடைய முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவருக்கும் ஆச்சரியம் கொடுத்தார்.
இந்த போட்டிக்கு பிறகு பேசிய பும்ரா கூறுகையில் ” எனக்கு இப்போது மிகவும் நன்றாக உணர்வு இருக்கிறது. தேசிய கிரிக்கெட் அகாடமியில் நான் செய்த பயிற்சிகள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தன. என்னுடைய இந்த சிறப்பான செயல்பாடுகளுக்கு காரணமே பயிற்சியாளர்கள், சப்போர்ட் ஸ்டாப்புகள், ஆலோசகர்கள் வழங்கிய உதவிதான். அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.
இந்த போட்டியில் டாஸ் வென்றது எங்களுக்கு அதிர்ஷ்டமாக அமைந்ததாக நினைக்கிறேன். இறுதியில் வானிலையும் எங்களுக்கு உதவியது இந்த போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. இனியும் தொடர்ச்சியான என்னுடைய சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த விரும்புகிறேன். அணியின் அனைத்து அனைவரும் தயாராக இருந்தினால் சிறப்பாக செயல்பட்டார்கள். ஐபிஎல் அவர்களுக்கு உதவியது என நினைக்கிறேன். ரசிகர்களின் ஆதரவும் எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது என்றார் பும்ரா.




