அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஐசிசி 2023 உலகக்கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியானது தற்போது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவதினால் இந்திய இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று இருக்கிறது. குறிப்பாக கடந்த 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.

ஆனாலும் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் கீப்பர் பற்றியும் குறிப்பாக 4வது இடத்தில் யார் இறங்க போகின்றனர் என்பது பற்றியும் பேசிய சர்ச்சை தற்போது நிகழ்ந்து வருகிறது. ஏனென்றால் அணியின் தொடக்க வீரர்கள் விரைவாக ஆட்டமிளகாகும் பட்சத்தில் 3 மற்றும் 4 வது வீரர் தான் நிலையாக நின்று விக்கெட்டுகள் விழுவதை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு கடந்த வருடங்களில் ஸ்ரேயஸ் ஐயற் மிகவும் திறமையாகாவே செயல்பட்டார்.
ஆனால் அவருக்கு காயம் ஏற்பாடு தற்போதுதான் திருப்பியுள்ளதால், உலக கோப்பையில் விளையாடுவார் என்பது சந்தேகமே. அதே நேரத்தில் சூரிய குமார் யாதவ் வது இடத்தில் சரியாக இருப்பார் என்று எதிர்பார்கப்பட்டது குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அதற்குள் அசால்டாக 3 சதங்கள் அடித்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 26 போட்டிகளில் 511 ரன்களை 24.33 என்ற மோசமான சராசரியில் எனேற்றம் தந்துள்ளார்.

இந்த நிலையில் தான் சூரியகுமார் யாதவ் தடுமாறும் காரணம் குறித்து பேசியுள்ளார் எம்எஸ்கே பிரசாத்.அவர் கூறுகையில் “ஒருநாள் கிரிக்கெட்டில் அவருக்க்கு தகுந்த இடத்தில் ரோல் கிடைக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். ஒருவேளை அவருக்கு தகுந்த ரோலை சரியாக செய்தால் உலக கோப்பையில் இந்தியாவுக்கு சிறந்த போட்டிகளை வெற்றி பெற்று தரும் ஒருவராகவும் சிறந்த ஃபினிஷராகவும் இருப்பார் என நான் நம்புகிறேன்.
அவருக்கு நல்ல திறமை இருக்கிறது. எனவே அவருக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டும். அதற்கு தகுந்தாற் போல கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் சூரியகுமார் விஷயத்தில் சிறப்பாக செயல்படுகிறார்கள். குறிப்பாக அவர்கள் அவருக்கு எந்த ரோலில் விளையாட வைக்க வேண்டும் என்பதை அறிந்து தெளிவை கொடுத்துள்ளார்கள். அது நிச்சயமாக அவருக்கு நல்ல உதவியாக இருக்கும்.

ஏனென்றால் இக்கட்டான சூழ்நிலையில் பொடியை ஃபினிஷிங் செய்யும் வேலையை அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் செய்வார் என்று நான் நினைக்கிறேன். அப்படி செய்வது சூரியகுமார்கும் நிம்மதியை கொடுத்து அதற்கேற்றார் திட்டமிட்டு விளையாட வாய்ப்பை கொடுக்கும் என்றார் எம்எஸ்கே பிரசாத்.அதாவது 4வது இடத்தை விட லோயர் மிடில் ஆர்டரில் கடைசி நேரத்தில் களமிறங்கி அடிக்கும் வாய்ப்பை பெறும் போது டி20 கிரிக்கெட் போலவே சூரியகுமார் ஒருநாள் போட்டிகளிலும் அசத்துவார் என்று பிரசாத் நம்பிக்கை தெரிவிக்கிறார்.





