மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியாது பல தொடர் போட்டியில் விளையாடி வருகிறது.இடஙக சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே இந்தியா டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியானது தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் அற்புதமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இரண்டாவது போட்டியிலும் வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இந்த தோல்விக்கு காரணம் ஹர்திக் பாண்டியாதான் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் முதற்கொண்டு பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் ஹர்திக் பாண்டியா மற்றும் பயிச்சியாளர் டிராவிட் செய்த தவறி சுட்டிக்காட்டி பலரும் அவருக்கு கேப்டன் பதவி செட்ஆகவில்லை என்றும் விமர்சிக்கின்றனர். மேலும் இன்று நக்கும் மூன்றவது டி20 போட்டியிலும் இந்தியா தோல்வியை தழுவும் பட்சத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியாது 2016 ஆண்டிற்கு பிறகு இந்தியாவை வீழ்த்தும், அதே நேரத்தில் 0-3 என்ற கணக்கில் வெற்றியும் பெரும்.
இதனால் இந்திய அணிக்கு தற்போது இன்று நடக்கும் போட்டியானது தன்மான பிரச்னையாக மாறியுள்ளது. ஒருவேளை இந்த இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் மீதம் இருக்கும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும், அதோடு அந்த இரண்டு போட்டிகளுக்கு வெற்றி பெற்றால் இந்திய அணி இந்த தொடரில் வெல்லும். இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் முன்னாள் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்திவ் படேல் இந்திய அணியின் பயிற்சியாளர் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியதாவது “ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் பல அப்பட்டமான தவறுகள் உள்ளன. அதவது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் முதல் ஆட்டத்தில் நிக்கோலஸ் பூரன் பேட்டிங் செய்ய வந்தபோது அக்சர் பட்டேலுக்கு அந்த ஓவரைக் கொடுத்தது. இரண்டாவது போட்டியில் சாஹலை 4வது ஓவர் தராமல் இருந்ததில் அவர் செய்த சில முக்கியமான முடிவுகளில் தவறுகள் தெரிந்தது.

ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த போது மிகவும் சிறப்பாக செயல்பட்டார். அதற்கு முக்கியமான காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் அவருக்கு ஆஷிஷ் நெஹ்ராவின் ஆதரவு இருந்தது. ஆனால் இந்தியாவின் டி20 வடிவத்தில் செயல் திறன்மிக்க பயிற்சியாளராகிய ராகுல் டிராவிட்டிடம் இருந்து அவருக்கு அப்படிப்பட்ட ஒரு ஆதரவு கிடைத்ததாக நான் நினைக்கவில்லை.
உண்மையில் டிராவிட் தான் பயிற்சியாளரா? இதிலிருந்து தெரிவது நமக்குச் சுறுசுறுப்பான பயிற்சியாளர் ஒருவர் தேவை. ஹர்திக் பாண்டியாவிடம் நல்ல செயல்திறன் இருக்கிறது. ஆனால் அவருக்கு அதனை வெளிப்படுத்த ஆதரவு தேவை. ஆனால் அதை ராகுல் டிராவிட் ஹர்திக் பனியாவிற்கு வழங்கவில்லை என்று கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் பார்திவ் படேல்.




