ஐபிஎல் போட்டியில் பல இளம் வீரர்கள் தங்களுடைய அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில் சில இளம் வீரர்கள் மோசமான வார்த்தைகளிலும் பெறுகின்றனர். அந்த வகையில் சொல்ல வேண்டும் என்றால் பிரதிவ் ஷாவை கூறலாம். ஏனென்றால் தற்போது கலக்கி வரும் சுப்மன் கில் மற்றும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத பிரதிவ் ஷா இருவரும் U19 ஒரே அணியில் தான் இருந்தார்கள்.

U19 உலகக்கோப்பையில் நிசிலாந்து அணியை வீழ்த்திய பிறகு ஆஸ்திரேலியாவை பைனலில் வீழ்த்தியது அந்த அணி. மேலும் அந்த அணிக்கு பிரதிவ் ஷா கேப்டனாகவும், கில் மேன் ஆஃப் தி டோர்னமெண்ட்டாகவும் இருந்தார். இதனால் இருவருக்கும் நல்ல எதிர்காலம் இருக்கும் என்றார் கூறப்பட்டது. அதே போன்று ஷா இந்திய அணியில் 2018ஆம் ஆண்டு இணைந்தார். இவருடைய பேட்டிங்கை பார்த்து அடுத்த வீரேந்திர சேவாக் இவர் தான் என்று பலர் கூறினார்.
ஆனால் வெஸ்ட் இன்டிங்ஸ்க்கு எதிரான போட்டிக்கு பிறகு அவருடைய கிரிக்கெட் வாழ்ககை தலைகீழாக மாறி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பிரித்வி ஷா 8 போட்டிகளில் வெறும் 116 ரன்கள் தான் அடித்திருந்தார். அவருடைய பிரச்சினையே அவரினால் வேகமும், ஸ்விங்கும் தான். அதனை பயன்படுத்தி இவரை தொடக்கத்திலேயே அணிகள் ஆட்டமிழக்க செய்து விடுகின்றனர்.

மேலும் தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி தொடரில் நார்த்தம்டன்ஷைர் அணிக்காக விளையாடிய போது கூட 4ஆம் தேதியின் போது முக்கியமான நேரத்தில் ஹிட் விக்கெட் ஆகி ஆட்டமிழந்தார். அது சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அப்படிப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெற்ற சோமர்செட் அணிக்கு எதிரான 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நார்த்தம்டன்ஷைர் அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடிய அவர் சிறப்பாக செயல்பட்டு வேகமாக ரன்களை குவித்தார்.
48 | A new career best for Prithvi Shaw! 💪
— Northamptonshire CCC (@NorthantsCCC) August 9, 2023
He's now 238 not out.
Two Hundred And Thirty Eight. Off 150 balls.
Steelbacks 403/4.
Watch live 👉 https://t.co/CU8uwteMyd pic.twitter.com/YZ3t3Bi988
அதே வேகத்தில் நேரம் செல்ல செல்ல நங்கூரமாக நின்று எதிரணி பவுலர்களை பந்தாடிய அவர் 150 ரன்கள் கடந்தும் ஓயாமல் அதிரடியாக விளையாடினார். மேலும் தொடர்ந்து விளையாடிய பிரிதிவி ஷா இரட்டை சதமடித்தும் 28 பவுண்டரி 11 சிக்ஸர்களை பறக்க விட்டு 244 (153) ரன்களை குவித்து பெவிலியன் திரும்பினார். சொல்லப்போனால் இவரை ஆட்டமிழக்க செய்வதற்குள் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் கடுமையாக இருந்தது என்றே சொல்லலாம்.
✅ Sixth-highest score in List A history
— Metro Bank One Day Cup (@onedaycup) August 9, 2023
✅ Second-highest List A score in 🏴
✅ Highest-ever List A score for @NorthantsCCC @PrithviShaw with one of the all-time great knocks 👑#MBODC23 pic.twitter.com/NfXH7RHfqk
மேலும் இவரது அதிரடியால் நார்த்தம்டன்ஷைர் அணியானது 50 ஓவர்களில் 415 ரன்கள் எடுத்தது. இதற்கு முன்னர் கடந்த 2021 விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் பாண்டிச்சேரிக்கு எதிராக பிரிதிவி ஷா 227 ரன்களை அடித்திருந்தார். தற்போது அடித்த 244 ரன்களால் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தன்னுடைய அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அவர் 1க்கும் மேற்பட்ட இரட்டை சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார் பிரிதிவி ஷா.





