தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023ல் நேற்று நடந்த நான்காவது போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் பா11சி திருச்சி அணிகளுக்கு இடையே கிரிக்கெட் ஆடுகளத்தில் அரிதான நிகழ்வு ஓன்று நடந்துள்ளது நடந்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு இளம் வீரர்களை கண்டுபிடிக்கும் பொருட்டு தமிழ் நாட்டில் கொண்டுவரப்பட்டதுதான் தமிழ்நாடு பிரீமியர் லீக். இதுவரையில் 6 சீசன்கள் நடந்திருக்கிறது.

இந்நிலையில் தற்போது 7வது சீசன் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த சீசனில் நேற்று நடந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸின் போது ஒரு அறிய சம்பவம் நடந்துள்ளது. டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஷ்வின் வீசிய 13வது ஓவரின் ஐந்தாவது பந்தை வீசும் போது அது கேட்ச் என்று பின்னல் நின்ற வீரரால் கூறப்பட்டது. இந்நிலையில் மைத்தனத்தில் இருந்த அம்பயர் திருச்சியின் ஆர் ராஜ்குமாருக்கு அவுட் கொடுத்தார்.
இந்த முடிவால் அதிருப்தி அடைந்த அவர், உடனடியாக முடிவை மறுபரிசீலனை செய்தார். அதே நேரத்தில் ராஜ்குமார் பந்தை அடிக்கும் அதே சமயத்தில் பந்து கீழே பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அல்ட்ரா-எட்ஜ் ஒரு ஸ்பைக்கைக் காட்டியது. இருப்பினும் மூன்றாவது நடுவர் பேட்டிற்கும் பந்துக்கும் இடையே தெளிவான இடைவெளி இருந்ததால் தன்னுடைய தீர்ப்பை மாற்றி நாட் அவுட் கொடுத்தார்.

இருப்பினும் ஆன்-பீல்ட் அம்பயர் தனது முடிவை மாற்றி நாட் அவுட் என்று சமிக்ஞை செய்தவுடன், அஸ்வின் மறுபரிசீலனைக்குச் சென்றார். மூன்றாவது நடுவர் மீண்டும் ஒருமுறை முழு செயல்முறையையும் மேற்கொண்டார். ஆனால் எதையும் கண்டுபிடிக்க முடியாததால் முடிவு கொடுக்கப்படவில்லை. இப்படி ஒரு பந்தில் இரண்டு முறை DRS சென்றது கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அறிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் போட்டியை பற்றி பேசுகையில் “திருச்சி கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜு டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர் ஜாபர் ஜமால் 4 ரன்கள் எடுத்து சரவண குமார் வீசிய முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்ததால் திருச்சி அணிக்கு சரியான தொடக்கம் கிடைக்கவில்லை. இதனால் 10.2 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது திருச்சி.
2 reviews in one ball, one by batter and one by bowler (Ashwin).
— Johns. (@CricCrazyJohns) June 14, 2023
Rarest of incident in world cricket. pic.twitter.com/jB1zZ9qcmw
திருச்சி vs திண்டுக்கல் :
கேப்டன் ராஜு 41 பந்தில் 48 ரன்களும், ஆர் ராஜ்குமார் 22 பந்துகளில் 39 ரங்களும் எடுத்தது 7வது விக்கெட்டுக்கு 40 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்து 100 ரன்களைக் கடக்க உதவினார்கள். இருப்பினும், 17வது ஓவரில் அஷ்வின் ராஜுவை வெளியேற்றியதால் அவர்களது பார்ட்னர்ஷிப் முடிந்ததும் மற்ற பேட்ஸ்மேன்களால் பெரிய ரன்களை எடுக்க முடியவில்லை. இதன்போது சர்வணா குமார் 3 ஓவர்கள் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுங்களையும், அஷ்வின் 26 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் சுபோத் பதி 2 விக்கெட்டுகளை வீழ்த்த, 19.1 ஓவரில் 120 ரன்களுக்குச் சுருண்டது திருச்சி.

இதனையடுத்து இரண்டாவதாக களமிறங்கிய திண்டுக்கல் ட்ரகன்ஸ் முதல் ஓவரிலேயே இரண்டு பந்தில் டக் ஆனத்தினால் டிராகன்ஸுக்கும் ஆரம்ப அடி கிடைத்தது. இருப்பினும், அவரது தொடக்க கூட்டாளியான ஷிவம் சிங் ஒரு அற்புதமான ஆட்டத்தை விளையாடி 30 பந்துகளில் 46 அடித்து இறுதியில் டிராகன்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.





