உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர் பார்த்து காத்துகொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடர் முடிந்து சில வாரங்களிலேயே உலக கோப்பை டி20 தொடரானது அமெரிக்க மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் தொடங்க உள்ளது. இதனால் ஐபிஎல் முடித்த கையேடு கிரிக்கெட் ரசிகர்களுக்கு மேலும் 2 மாதங்கள் பெரும் கிரிக்கெட் விருந்து உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

இந்நிலையில் உலக கோப்பை 2024 டி 20 தொடரில் விளையாடும் அணிகளின் வீரர்கள் குறித்த பட்டியல் சமீபத்தில் வெளியான நிலையில் இந்தியா தங்களுடைய அணியை அறிவித்தது. இந்த னையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்கள் இல்லை. குறிப்பா நடராஜன், ருதுராஜ், கேஎல் ராகுல், உனட்கட் போன்ற வீரார்கள் இடம்பெற வில்லை. இவர்களை போல துரதிஷ்ட வசமாக அணியில் இடம் பெறாமல் போனவர் தான் ரிங்கு சிங்.
2023 ஐபிஎல் போட்டியின் போது முடியவே முடியாது என்று இருந்த நிலையில் எங்கேயோ தெரிந்த வெளிச்சம் போல திடீரென களத்தில் இறங்கி ரிங்கு செய்த மந்திரம் இன்னும் பல காலங்களுக்கு ரசிகர்கள் மனதில் இருந்து மறையாமல் இருக்கும். ஆனால் இப்படி பல சாதனைகளை படைத்த ரிங்கு சிங் சாதரண குடும்பத்தை சேர்ந்தவர். இவரின் அப்பா கேஸ் சிலிண்டர் போடுபவர், சகோதரர் ஆட்டோ ஓட்டுபவர். ஆனாலும் தன்னுடைய விடா முயற்சியாலும் தன்னபிக்கையினாலும் இந்த நிலைமைக்கு அவர் வந்துள்ளார்.

இந்நிலையில் 2024 உலக கோப்பை டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியின் ரிங்கு சிங் இடம் பெறவில்லை. இந்நிலையில் இது குறித்து பேசிய ரிங்கு சிங் தந்தை கூறுகையில் : எங்களுக்கு ரிங்கு சிங் மீது நிறைய நம்பிக்கைகள் இருந்தன, ஆனால் ஏமாற்றங்களும் சில இருந்தன. அவர் உலக கோப்பையில் விளையாடும் இந்திய அணியின் 11 வீரர்களில் இடம் பெறுவார் என்ற நம்பிக்கையில் இனிப்புகள் மற்றும் பட்டாசுகளை வாங்கி வைத்திருந்தோம். அவர் அணியில் இல்லாமல் இருந்தாலும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்

ரிங்கு சிங்கின் அம்மா வருத்தமடைந்தார், அவர் தனது தாயிடம் பேசிக் கொண்டிருந்தார். அவரது இதயம் உடைந்தது போல் இல்லை. அவர் தனது தாயிடம் சொன்னார் நான் அணியுடன் செல்கிறேன் ஆனால் 15 பேர் கொண்ட அணியில் இடம்பெறவில்லை என்று ரிங்கு கூறியதாக ரிங்குவின் தந்தை கூறினார்.
டி20 உலக கோப்பையில் விளையாடும் இந்திய அணி :
ரோஹித் சர்மா , யஷஷ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ். ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல். அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
இருப்பு வீரர்கள்: சுப்மான் கில், ரிம்கு சிங், கலீல் அகமது, அவேஷ் கான்





