டி20 உலக கோப்பை போட்டியானது தொடங்கிய நிலையில் ஏற்கனவே கனடா, உகாண்டா, ஆப்கானிஸ்தான் போன்ற அணிகள் மோதிய நிலையில் நேற்று இரவு இந்திய அணி மற்றும் அயலர்ந்து அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது சாதகமாக அமைந்து. மேலும் மைத்தனம் புதியது என்பதால் பந்துவீச்சி சிறந்த தேர்வாக இருக்கும் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் இதனையடுத்து களமிறங்கிய அயலர்ந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக ஓவரில் 2 விக்கெட்கள் விழுந்தன. இதற்கு மேலும் பின்னர் வந்த பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடாமல் விக்கெட்டுகளை இழந்த நிலையில் அயர்லாந்து அணி 16 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதற்கு பிறகு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களானான விராட் கோலி 2 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா மட்டும் சிறப்பாக இருந்து விளையாடினார். மேலும் அரை சதம் அடித்த காரணத்தினால் இந்திய அணி 12. 2 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 உலக கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா.

இந்நிலையில் இந்த போட்டிக்கு பிறகு பேசிய ரோஹித் சர்மா கூறுகையில் : எனக்கு கையில் கொஞ்சம் புண். இந்த ஆடுகளத்தில் இருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்று தெரியவில்லை. ஐந்து மாதங்கள் மட்டுமே பழமையான இந்த ஆடுகளத்தில் எப்படி விளையாடுவது என்று தெரியவில்லை. நாங்கள் இரண்டாவது பேட் செய்தபோதும் விக்கெட் சரிந்ததாக நான் நினைக்கவில்லை. இங்கு பந்துவீச்சாளர்களுக்கு போதுமான அளவு இருந்தது. நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். அதே போல தொடர்ந்து பந்துவீச முயற்சி செய்ய வேண்டும்.
இவர்கள் அனைவரும் நிறைய டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியவர்கள். எங்கள் அணியில் அப்படி இல்லாத ஒரே பையன் அர்ஷ்தீப். இருந்த போதிலும் அவரது இரண்டு விக்கெட்டுகள் எங்களுக்கு இந்த போட்டியில் ஒரு முன்னோடியாக அமைந்தது. நீங்கள் எல்லா போட்டியிலும் நான்கு ஸ்பின்னர்களை விளையாட முடியாது. சீமர்களுக்கு ஆடுகளம் நல்ல உதவியாக இருந்தது. அதனால் நாங்கள் அதற்க்கு தகுந்த அணியை தேர்வு செய்ய முயற்சி செய்கிறோம்.
நேர்மையாக இருக்க ஆடுகளத்திலிருந்து என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. பாகிஸ்தான் அணிக்கு ஏத்திறாங்க நிலைமைகள் இப்படித்தான் இருக்கும் என்ற நிலையில் அதற்கு தயாராவோம். இது ஒரு வகையான விளையாட்டாக இருக்கும். இதில் எங்களது அணி அனைவரும் முழுமையான பங்கை கொடுக்க வேண்டும். மேலும் இந்த மைதானத்தில் கொஞ்சம் நேரம் செலவழித்து என்ன மாதிரியான ஷாட்களை விளையாடுவது என்பதைப் புரிந்துகொள்வது நல்லது என்றார் ரோஹித் சர்மா.





