மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியாது பல தொடர் போட்டியில் விளையாடி வருகிறது.இடஙக சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே இந்தியா டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியானது தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் அற்புதமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இரண்டாவ்து போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியானது பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து தொடக்க வீரார்களாக களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் கிஷான் பொறுமையாகவே அட ஆரம்பித்தனர். ஆனால் சுப்மன் 7(9) ரன்களை மட்டுமே எடுத்து மீண்டும் சொதப்பினார். அதற்கு பிறகு வந்த சூரியகுமார் யாதவ் 1(3) ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பியதினால் இந்திய அணிக்கு அழுத்தமானது கூடியது.
பின்னர் நிலையாக நின்று ஆடிக்கொண்டிருந்த ஹர்திக் பாண்டியா 24(18) ரன்களில் ஆட்டமிழக்க ஆக்சர் படேல் 14(12) ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது. தொடக்கத்தில் 2 விக்கெட்டுகளை இழந்தது, அதற்கு பிறகு 4வது ஓவரில் ஆதிரடி வீரர் கையில் மேயர்ஸ் ஆட்டமிழந்தததால இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் ஆனால் பின்னர் கைகோர்த்து கொண்ட நிகோலஸ் பூரன் மற்றும் கேப்டன் ரோவ்மன் பவல் இருவரும் இணைந்து அற்புதமாக விளையாடி இந்தியாவின் பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் பறக்க விட்டனர். மேலும் நிகோலஸ் பூரன் 50(29) அரை சதம் விளாசினார். அதற்கு பின்னர் கேப்டன் ரோவ்மன் பவல் 21(19) ஆட்டமிழந்தார், மறுபுறம் கலக்கி கொண்டிருந்த பூரன் 67(40) ரன்களில் ஆட்டமிழந்தாலும் அது வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற போதுமானதாக இருந்தது.

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ராவ்மன் பவல் கூறுகையில் “தற்போது நாங்கள் நல்ல நிலைமையில் இருக்கிறோம். நாங்கள் கடந்த 2016ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணிக்கு எதிராக நாங்கள் டி20 தொடரை கைப்பற்ற முடியாத நிலையில் இந்த முறை அதற்கான நல்ல வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருப்பதாக நம்புகிறேன். பவுலர்கள் மிகவும் சிறப்பாக செயல்பாட்டார்கள். மேலும் வேகப்பந்து வீச்சாளர்களை ஒரு ஓவர் மட்டுமே பவர் பிளேவில் வீச சொன்னேன் ஏனென்றால் மைதானம் மிகவும் சூடாக இருந்தது.
இந்திய அணியின் மணிக்கட்டு பந்துவீச்சாளர்கள் பந்துவீசும் பொது இடது கை பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். சாஹல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னாய் என மூன்று ஸ்பின்னர்கள் இருந்தால் வலது கை வீரர்கள் வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அந்த வகையில் இந்த போட்டியில் பூரான் மற்றும் ஹெட்மயர் ஆகியோர் இருந்தது எங்களுக்காக சிறப்பாக பந்து வீசினார்கள் என்றார் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பவல்.





