இந்தியாவில் கிரிக்கெட்டுக்கான கட்டுப்பாட்டு வாரியம் BCCI ஜூலை 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை, சீனாவின் ஹாங்க்சோவில் நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பல காலம் கழித்து விளையாடுகிறது. 2023 க்கான ஆசிய விளையாட்டு போட்டிகளானது வரும் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி முதல் ஆக்டோபர் 8ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய தன்னுடைய டி20 அணியை நேற்று அதிகார பூர்வமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இந்த அணியில் ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், ராகுல் திரிபாதி, ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், சிவம் மவி, சிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்)ஆகியோர் உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் கேப்டன் ருத்துராஜ் கெய்க்குவாட் இந்த போட்டியில் வெற்றிபெறுவது பற்றி உருக்கமாக பேசியுள்ளார்.
ருத்துராஜ் கெய்க்குவாட் பேசிய வீடியோ :
அவர் கூறியதாவது “இந்த வாய்ப்புக்கு உண்மையில் நன்றி. இந்தியாவிற்காக விளையாடுவது ஒரு பெருமை வாய்ந்த உணர்வு. அத்தகைய ஒரு பெரிய நிகழ்வில் இந்தியா அணியை வழிநடத்துவது தனிப்பட்ட முறையில் எனக்கும் என்னுடைய மற்ற உறுப்பினர்களுக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். எனவே உண்மையிலேயே எதிர்நோக்குகிறோம், மிகவும் மகிழ்ச்சியாகவும், அதே நேரத்தில் உண்மையில் பெருமையாகவும் இருக்கிறது என்று கூறினார் ருத்துராஜ் கெய்க்வாட்.
🗣️ “𝑻𝒉𝒆 𝒅𝒓𝒆𝒂𝒎 𝒘𝒐𝒖𝒍𝒅 𝒃𝒆 𝒕𝒐 𝒘𝒊𝒏 𝒕𝒉𝒆 𝒈𝒐𝒍𝒅 𝒎𝒆𝒅𝒂𝒍, 𝒔𝒕𝒂𝒏𝒅 𝒐𝒏 𝒕𝒉𝒆 𝒑𝒐𝒅𝒊𝒖𝒎 𝒂𝒏𝒅 𝒔𝒊𝒏𝒈 𝒕𝒉𝒆 𝒏𝒂𝒕𝒊𝒐𝒏𝒂𝒍 𝒂𝒏𝒕𝒉𝒆𝒎 𝒇𝒐𝒓 𝒕𝒉𝒆 𝒄𝒐𝒖𝒏𝒕𝒓𝒚”
— BCCI (@BCCI) July 15, 2023
A happy and proud @Ruutu1331 is excited to lead #TeamIndia at the #AsianGames 😃 pic.twitter.com/iPZfVU2XW8
மேலும் அவர் பேசுகையில் “இது மிகவும் வேடிக்கையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் நாங்கள் அனைவரும் இளைஞர்கள், கடந்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளாக ஒருவருடன் ஒருவர் சுற்றி வருகிறோம். இந்தியா ஏ கேம்களை விளையாடி ஒருவருக்கொருவர் எதிராக ஐபிஎல் போட்டியிலும் விளையாடினோம். பின்னர் சில இந்தியா விளையாட்டுகளும் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
அணியின் ஒரு பகுதியாக இருக்கும் அனைவருக்கும் இது மிகவும் உற்சாகமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதையும், நாட்டிற்கான பதக்கத்தை வெல்வதும் நாம் எப்போதும் தொலைக்காட்சியில் பார்த்து வளர்ந்த ஒன்று. கண்டிப்பாக அங்கு சென்று விளையாடுவதும் பதக்கங்களை வெல்வதும் மிக மிக அற்புதமான ஓன்று என்று கூறினார் ருதுராஜ் கெய்க்குவாட்.
NEWS 🚨- Team India (Senior Men) squad for 19th Asian Games: Ruturaj Gaikwad (Captain), Yashasvi Jaiswal, Rahul Tripathi, Tilak Varma, Rinku Singh, Jitesh Sharma (wk), Washington Sundar, Shahbaz Ahmed, Ravi Bishnoi, Avesh Khan, Arshdeep Singh, Mukesh Kumar, Shivam Mavi, Shivam…
— BCCI (@BCCI) July 14, 2023
மேலும் ரசிகர்கள் பற்றி பேசிய அவர் கூறுகையில் “இந்திய ரசிகர்ள் நாடு விளையாடும் எந்த விளையாட்டுகளையும் அனைவரும் ஆதரிக்கின்றனர். எந்த தொடர் அல்லது எந்த உலகக் கோப்பைகளும் ஆனால் இது ஏதோ சிறப்பு என்று நான் நினைக்கிறேன். நாங்கள் நிச்சயமாக கிரிக்கெட்டின் ஒரு பிராண்டை விளையாடுவோம். இந்தியாவில் இருக்கும் அனைவரையும் பெருமை படுத்துவோம். என்னுடைய இப்போதைய கனவு தங்கப் பதக்கத்தை வெல்வதும், மேடையில் நின்று நம் நாட்டிற்கான தேசிய கீதத்தை பாடுவதும் தான் என்றார் ருத்துராஜ் கெய்க்வாட்.





