இந்திய அணியானது சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் அடித்தாக இந்தியா 3டி 20 போட்டிகள் கொண்ட அயலர்ந்து தொடரில் நேற்று முதல் போட்டியை விளையாடியது. ஆனால் இந்த தொடரில் ரோஹித் மற்றும் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் ஓய்வு பெற்றதினால் பும்ரா கேப்டனாகவும், ருதுராஜ் கைகுவாட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுளார்.

இந்நிலையில் இந்த தொடரில் முதல் போட்டியில் வென்ற இந்தியா இரண்டவது போட்டியில் நேற்று ஆகஸ்ட் 20-ஆம் தேதி டப்ளின் நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் அயர்லாந்து அணியை 33 ரன்கள் வித்தியாசத்தின் மூலம் இந்தியா இந்த தொடரை (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் அயர்லாந்து அணிக்கு எதிராக சிட்னியா டி20 தொடரில் இதுவரையில் வீழ்ந்ததில்லை என்ற சாதனையையும் தக்க வைத்துள்ளது.
மேலும் இந்த போட்டியில் துணை கேப்டனாகிய ருதுராஜ் கெய்க்குவாட் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். அதோடு சஞ்சு சாம்சனுமும் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிறப்பாக பல ஷாட்டுகளை விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தார். இவர்கள் மட்டுமின்று சிவம் துவே ரிங்கு ரிங் இருவருமே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்கள். குறிப்பாக ரிங்கு சிங் கடைசி ஓவரில் 3 தொடர் சிக்ஸர்களை விளாசினார். இது அணிக்கு பெரிய ரன் அமைக்க உதவியது.

இந்நிலையில் இந்த போட்டிக்கு பிறகு பேசிய ருதுராஜ் கெய்க்குவாட் பேசுகையில் ரிங்கு சிங் குறித்து புகழ்ந்து பேசியிருந்தார். அவர் கூறியது பின்வருமாறு “இந்த வருட ஐபிஎல் போட்டிக்கு பிறகு ரிங்கு ஏற்கனவே அனைவரின் ஃபேவரைட் ஆகிவிட்டார். இந்த ஆண்டு ஐபிஎல்லில் பேட்டிங் செய்யும் போது அவர் மிகுந்த முதிர்ச்சியை வெளிப்படுத்தினார். ரிங்குவின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று என்னவென்றால் அவர் பந்திலிருந்தே அடிக்க ஆரம்பித்தது கிடையது.
அவர் எப்பொழுதும் தனக்கு நேரம் கொடுக்கிறார். நிலைமை எதுவாக இருந்தாலும் அவர் எப்போதும் நிலைமையை பொறுத்திருந்தான் கையாளுவார். பின்னர் அவர் தாக்குதல் முறையில் விளையாடுவர். எனவே வரவிருக்கும் அனைத்து வீரர்களுக்கும், போட்டியில் ஒரு ஃபினிஷராக இருக்க விரும்பும் நபர்களுக்கும் இவரை பார்த்து கற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். பேட்டிங்கிற்கு வந்தவுடன் சிறிது நேரம் எடுத்துக்கொள்வது எப்போதும் முக்கியம். பின்னர் அதிரடியில் ஈடுபடலாம்.
எனவே இந்த ஆண்டு அவர் இந்த திறமையை நன்கு கற்றுக்கொண்டார். எப்போது அதிரடியை ஆரம்பிக்க வேண்டும் என்று அவருக்கு தெரியும். அவர் சரியான நேரத்தில் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை ஆரம்பிக்கிறார். இது அவரது முதல் இன்னிங்ஸ் என்பதால் அவருக்கு முக்கியமான இன்னிங்ஸ். மேலும் இது அவருக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நான் உணர்கிறேன் என்றார் ருதுராஜ் கெய்க்குவாட்.




