சமீப காலமாக கிரிக்கெட் மீதுள்ள ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகமாகி வருகிறது. கால்பந்து போட்டிகளின் மீது ஆர்வம் கொண்ட பல வெளிநாட்டு ரசிகர்களும் டி20 போட்டிகள் வந்த பிறகு கிரிக்கெட் பக்கமும் திரும்பியுள்ளார். இதனை தொடர்ந்துதான் பல நாடுகளில் லீக் போட்டிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அங்கே கிரிக்கெட் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கிரிக்கெட் வாரியங்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தான் தற்போது அமெரிக்காவில் லீக் போட்டிகளானது நடக்க இருக்கிறது. இதில் மொத்தமாக 6 அணிகள் விளையாட இருக்கின்றனர். இந்த டி10 மாஸ்டர்ஸ் லீக் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகள் போன்றே இந்த போட்டிகளுக்கும் அணிகளுக்கு தேவாயான வீரர்களை ஏலம் எடுக்கிறது அணிகள். இந்த ஏலத்தில் ஐபிஎல் போன்றே பல நாடுகளின் வீரர்களும் கலந்து தங்களுடைய திறமையை வெளிப்படுத்த இருக்கின்றனர்.
இதில் ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிங்களில் ஓய்வு பெற்ற வீரர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதற்கான ஏலம் சமீபத்தில் முடிவைடந்த நிலையில் கலிபோர்னியா நைட்ஸ், டெக்சர்ஸ் சார்ஜஸ், நியூயார்க் வாரியர்ஸ், மோரிஸ்வில்லி யூனிட்டி, அட்லாண்டா ஃபயர் மற்றும் நியூ ஜெர்சி லெஜண்ட்ஸ் ஆகிய அணிகள் விளையாடுகின்றனர். இந்த தொடரானது வரும் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இந்த போட்டியில் களமிறங்கும் அணிகளின் நிலையானது எந்த ஏற்ற தாழ்வும் இல்லாமல் சமச்சீராக இருக்க இந்திய மற்றும் பல்வேரு நாடுகளில் இருக்கும் வீரர்கள் இந்த தொடரில் கலந்து கொள்கின்றனர். இதில் இந்தியவில் இருந்து நியூ ஜெர்சி அணிக்காக யூசப் பதான், கவுதம் கம்பீர், யுவராஜ் சிங் விளையாட இருக்கின்றனர். மேலும் கலிபோர்னியா நைட்ஸ் அணிக்காக சுரேஷ் ரெய்னா, முகமது கைஃப், இர்பான் பதான் ஆகியோர் கலந்து கொள்ள இறுகின்றனர்.

இவர்களோடு ஹர்பஜன் சிங், க்ரிஷ் கெயில் உள்ளிட்டோர்மோரிஸ்வில்லி யூனிட்டி அணிக்காக களமிறகுக்குகின்றனர். சித்தார்த் திரிவேதி, பிரவீன் குமார், இலங்கை அணியின் உபுல் தரங்கா போன்றோரும் டெக்சர்ஸ் சார்ஜஸ்அணியில் விளையாட இருக்கின்றனர். மேலும் இந்திய வீரர்களை தவிர்த்து பஸ்கிஸ்தான் அணியின் அப்ரிதி மிஸ்பா, சாஹித் கம்ரான் போன்றோரும் நியூயார்க் வாரியஸ் அணியில் விளையாட இருக்கின்றனர்.





