இந்திய அணியானது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் தற்போது இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் 1 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றவுள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் 3 வது போட்டியில் தொடக்க வீரர்கள் தடுமாறிய நிலையில் திலக் வர்மா மற்றும் சூரிய குமார் யாதவ் இருவதும் இணைத்து சிறப்பாக விளையாடினார்கள்.

ஆனால் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் மிகவும் மோசமாக விளையாடினார்கள். சொல்லபோனால் தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் கலக்கிய ஜெய்ஸ்வால் தனக்கு கிடைத்த டி20 போட்டியிலும் அசத்துவார் என்று எதிர்பார்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார். இப்படிபட்ட நிலையில் தான் முன்னாள் தொடக்க வீரர்கள் 4வது போட்டியில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து பேசியுள்ளார் வாசிம் ஜாபர்.
அவர் கூறுகையில் “பவர்பிளேயில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஒரு நல்ல தொடக்கத்தைப் பெறுவது என்பது மிகவும் முக்கியம். குறிப்பாக சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா போன்ற வீரர்களுக்கு நல்ல தளத்தை வழங்குவது எவ்வளவு மிகவும் முக்கியமானது என்பதைப் பற்றி நாம் பேசினேன். ஆனால் அவர்கள் அதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள், ஏனெனில் அவர்களுக்குத் என்ன தேவை என்பதை அவர்கள் அறிவார்கள் என்றார் வாசிம் ஜாபர்.

மேலும் பேசிய அவர் கூறுகையில் ஜெய்ஸ்வால் ஆக்ரோஷமான நோக்கத்துடன் பேட்டிங் செய்வார் மறுபுறம் சுப்மான் கில் சற்று தற்காப்பு மிக்கவராக இருப்பதாக நான் உணர்கிறேன். எனவே 2 அல்லது 3 நல்ல ஷாட்களை உடனடியாக எடுத்தால் அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார் வாசிம் ஜாஃபர் மேலும் கூறுகையில், நான்காவது ஆட்டத்திற்கு இந்திய அணி நன்கு தயாராக வேண்டும் என்றார்.

கொஞ்சம் ஹோம்வொர்க் செய்ய வேண்டும். இது அதிக ஸ்கோர்களை மைதானம் என்பதினால் குறி வைத்து அடிக்கும் எண்ணத்தில் களமிறங்க வேண்டும். அர்ஷ்தீப் பல விஷயங்களை முயற்சி செய்கிறார். ஆனால் அவரால் அதை செயல்படுத்த முடியவில்லை. அதனால் அவரால் கூட முக்கியமான கட்டங்களில் 2 3 பவுண்டரிகளை இந்திய அணிக்காக நிறுத்த முடியும். அது விளையாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே அவர் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார் வாசிம் ஜாபர்.





