உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவி இருந்த நிலையில அதன் பின்னதாக ஆஸ்திரேலிய அணி ஐந்து தொடர் கொண்ட டி20 போட்டியில் மோதியது. அதில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதற்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்ற தென் ஆப்பிரிக்கா அணியை மூன்று வடிவ போட்டிகளிலும் இந்திய அணி விளையாட உள்ளது. அதில் தற்போது இந்திய அணி முதலாவது கட்டமாக 3 தொடர்களை கொண்ட t20 போட்டியில் விளையாடி வருகிறது.

அதில் முதல் போட்டி நேற்று முன்தினம் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்னும் மிஞ்சி இருக்கும் இரண்டு போட்டிகளில் எந்த அணி வெற்றிப்பெறுகிறதோ அதுதான் இந்த தொடரில் வெற்றி பெற்றது என்று கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதில் நேற்று இரண்டாவது போட்டியை தென்னாப்பிரிக்கா அணியும் இந்திய அணியும் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது. ஆரம்பத்தில் தென்ஆப்பிரிக்கா அணி ஆதிக்கத்தை செலுத்தியதால் இந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்தது விக்கெட்டுகளை இழந்தனர்.
குறிப்பாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெயஸ்வால் மற்றும் கில் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றத்தை அளித்தனர். இருப்பினும் கேப்டன் நிதானமான ஆட்டத்தால் இந்திய அணி 19.3 ஓவர்கள் 180 முடிவில் ரன்களை குவித்திருந்தது. இந்தியா அணியின் அதிகபட்சமாக ரிங்கு சிங் 68 ரன்களும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 56 ரன்களும் ஜிதேஷ் வர்மா 29 ரன்களையும் குவித்து இருந்தனர் . எனவே இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை குவித்தது.

மழை குறிக்கிட்டதால் DLS முறைபடி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 152 ரன்களை இலக்காகக் நிர்ணயிக்கப்பட்டது. தென்னாபிரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென்னாபிரிக்கா அணியின் அதிக பட்சமாக ஹென்ட்ரிக்ஸ் 49 ரன்களுக்கும் மார்க்ரம் 16ரன்களும் மில்லர் 17ரன்களும் அடித்து இருந்தனர். இந்திய அணியின் சார்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளையும் தென்னாபிரிக்கா அணி வெற்றி குல்தீப் மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். எனவே தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் ருதுராஜ் விளையாட வேண்டிய இடத்தில் கில் நேற்று விளையாட வைக்கப்பட்டார். ஆனால் அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது கில் விக்கெட்டை வீழ்த்திய பின் அப்போது பந்து வீசிய வில்லியம்ஸ் தலையில் கிரீடத்தை மாட்டுவது போல கில்லை விமர்சித்து இருந்தனர்.
Williams traps Gill in front ☝️
— ESPNcricinfo (@ESPNcricinfo) December 12, 2023
Tune-in to the 2nd #SAvIND T20I LIVE on @starsportsindia pic.twitter.com/e7yO7PZvIS
வில்லியம்ஸ் எதற்காக விமர்சிக்கிறார் என்றால் இந்திய அணியின் முன்னணி வீரராக இருக்கும் விராட் கோலியை அனைவரும் கிங் கோலி என்று அழைப்பது போல இந்திய அணியின் பிரின்சஸ் என்று அனைவரும் அழைத்து வருகின்றனர் பெரிதாக ஏதும் ஜொலிக்கவில்லை அவர் இதுவரை விளையாடிய ஆறு சர்வதேச T20 போட்டிகளில் ஐந்து ஒரு அரை சதம் மட்டுமே நடித்திருக்கின்றார். மற்ற போட்டிகளில் அவர் இரட்டை இலக்கை எண்களை கூட அடிக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார் என்பதையும் குறிப்பிடத்தக்கது.





