அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த தொடர் முதல் முறையாக முழுக்க முழுக்கு இந்தியாவில் நடைபெறுவதினால் இந்திய அணிக்கு மிக்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதே நேரத்தில் தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடுவதினால் வெற்றி அடைந்த ஆகவேண்டும் என்கிற அழுத்தமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் இந்திய அணியின் மிடில் ஆரடர் பேட்ஸ்மேன்கள் குறித்து பேசியுள்ளார். மேலும் அந்த விஷியத்தை சரிசெய்ய வில்லை என்ற அது ஒரு பெரிய பிரச்சனையாக மாறும் என்றும் எச்சரித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் “நான் தேசப்பற்றுடன் உள்ளவனாக சொல்கிறேன் இந்தியா வெல்லும் என்று சொல்லுவேன். ஏனென்றால் நான் ஒரு இந்தியன். ஆனால் காயம் காரணமாகவும் இந்திய பேட்டிங் வரிசையில் மிடில் ஆர்டரில் நிறைய கவலையளிக்கும் விஷயங்கள் இருப்பதாக எனக்கு தெரிகிறது. ஒருவேளை அதனை சரிசெய்யா விட்டால் பெரிய போட்டிகளில் அழுத்தம் காரணமாக இந்தியா தடுமாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

மேலும் அழுத்தமான போட்டிகளின் போது தயவு செய்து சோதனைகளை அரங்கேற்றாதீர்கள். அதோடு ஓப்பனிங் போன்ற டாப் ஆர்டரில் விளையாடுவதை விட மிடில் ஆர்டரில் விளையாடுவது மிகவும் முக்கியமானது. ஏனென்றால் இந்திய அணி நிர்வாகத்தில் யாராவது மிடில் ஆர்டரில் விளையாடும் வீரர்கள் சரியாக வேலை அந்த நேரத்தில் செயல்படுவர்களா என்பதிலேயே மிகப்பெரிய சந்தேகம் எழும்.
ஏனெனில் இந்திய அணியில் மிடில் ஆர்டரில் விளையாடும் பேட்ஸ்மேன்கள் யாரும் தற்போது தயாராக இல்லை என்பதே உண்மை. எனவே அந்த விஷயத்தை இந்திய அணி சரி செய்தே ஆக வேண்டும். ஏனென்றால் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் விரைவில் அவுட்டாகி விட்டால் அதை சரி செய்ய நீங்கள் பார்ட்னர்ஷிப்பை உருவாக்க வேண்டும். அது போன்ற இல்லாமல் மிடில் ஆர்டரில் விளையாடும் வீரர்கள் எடுத்த எடுப்பிலேயே அதிரடியான பேட்டிங்கை துவக்க முடியாது.

எனவே அந்த இக்கட்டான நேரத்தில் மிடில் ஆர்டர் பேட்மேன்கள் தான் நிலையாக நின்று அழுத்தத்தை உள்வாங்கி பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சீர் செய்ய வேண்டும். அப்படிப்பட்ட கடினமான வேலையை செய்வதற்கு அந்த இடத்தில சில அனுபவம் மிகுந்த வீரர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் யுவராஜ் சிங்.
இவர் சொலவ்து ஒருவகையில் உண்மை தான் ஏனென்றால் இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் சரியும் போதெல்லாம் அப்போது இருந்த யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா போன்ற இடது கை பேட்ஸ்மேன்கள் நிலையாக நின்று விக்கெட் விழுவதை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் தற்போது தொடக்கம் முதல் 6வது பேட்டிங் வரையில் வலது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதினால் இந்த விஷயம் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது




