மஹேந்திர சிங் தோனி இந்தியாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த ஒரு கேப்டன். ஆனால் அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து 2020 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இதனால் ஸ்டெம்புகளுக்கு பின்னே நின்று கொண்டு பந்துவீச்சாளர்களுக்கு அறிவுரை குறி விக்கெட் எடுக்கும் ஒரு கேப்டனை இந்தியா அதிகமாக மிஸ் செய்தது. இப்படிப்பட்ட நிலையில் தான் யுஸ்வேந்திர சாஹல் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தோனியுடனான நட்பு குறித்தும், அவர் எப்படி தனக்கு உதவினார் என்பது குறித்தும் பேசியுள்ளார்.

யுஸ்வேந்திர சாஹல், மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் இந்தியாவில் இணைந்த போது தோனியுடனான இவர்களது பிணைப்பு அதிகமாக இருந்தது. பல முறை விக்கெட்டுகள் விழ வில்லை என்றாலும் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவை வைத்து இணைந்து இந்தியாவுக்கு முக்கிய விக்கெட்டுகளை எடுத்து கொடுத்தனர். ஆனால் தோனி ஓய்வு பெற்ற பிறகு குறிப்பிடத்தக்க வகையில் இவர்களது விளாயாட்டு அளவில் அடிவாங்கியது. இதற்கு என்ன காரணம் என்று கூட சமீபத்தில் பேசிய இருதார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தான் சமீபத்தில் கயுஸ்வேந்திர சாஹல் கொடுத்த பேட்டியில் தோனி குறித்து பேசியுள்ளார் “ஒரு முறை செஞ்சுரியன் மைத்தனத்தில் தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடி கொண்டிருந்தேம். அப்போது நான் முதல் நங்கு ஓவரில் 64 ரன்களை விட்டுக்கொடுத்தேன். அப்போது கிளாசான் விளையாட நான் சரி நாம் அரண்டு த ஸ்டேன்ஸ் வந்து வீசட்டுமா என்று அவரிடம் கேட்டேன், அவரும் சரி என்றார். ஆனால் அந்த பந்தில் கிளாசான் சிக்ஸர் அடித்து விட்டார்.

பின்னர் தோனி என்னிடம் வந்து இது உன்னுடைய நாள் கிடையாது, பரவாயில்லை என்று கூறினார். மேலும் உங்களுக்கு இன்னமும் 5 பந்துகள் இருக்கிறது எனவே அந்த பந்துகளில் பெரிய ரன்களோ அல்லது பவுண்டரிகளோ கொடுக்காமல் வீசுங்கள் அது அணிக்கு உதவியாக இருக்கும் என்று கூறினார். அப்போதுதான் புரிந்து கொண்டேன் உங்களுக்கு மோசமான நாளாக அது இருந்தாலும், உங்களினால் அணிக்கு உதவி செய்ய முடியும் என்று கூறினார் யுஸ்வேந்திர சாஹல்.

நான் அவரை மிகவும் கண்மூடித்தனமாக நம்பினேன். அவர் ஏதாவது சொன்னால் அதனை அப்படியே பின்தொடர்ந்தேன். 95 சதவிகிதம் அவர் சொல்வதையும் 5 சதவிகிதம் என்னுடைய கருத்தையும் நான் மைத்தனத்தில் செயல்படுத்தினேன். வருடம் என்னுடை கருத்துகளையும் கூறுவேன். நாங்கள் பொதுவாக 10 வது ஓவருக்கு பிறகுதான் பந்துவீச வருவோம். அவர் அதற்குள் மைதானம் எப்படி இருக்கிறது எப்படி விக்கெட்டுகள் எடுப்பது என்பது பற்றி தெரிந்து வைத்திருப்பர்.
அப்போது நான் அந்த ஓவரிலேயோ அல்லது அடுத்த ஓவரிலேயே ஒரு விக்கெட்டை எடுத்து விடுவேன். அந்த கண்மூடித்தனமாக நம்பிக்கை தோனியிடம் மிகவும் அவசியம். மேலும் நான் அவருடைய தீவிர ரசிகரும் கூட. ஒரு பந்துவீச்சாளராக அவர் நம்முடைய 50 சதவிகிதம் வேலையே சுலபமாகி விடுவார். அதற்கு பிறகு நீங்கள் களமிறங்கி விக்கெட்டுக்களை எப்படி வீழ்த்துவது, எந்த மாதிரியான வேகத்தில் வீசுவது என்பது பற்றி யோசிக்கலாம்.





