உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு உச்சகட்டமாக காணப்படுகிறது.

முன்னதாக 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் துவங்கி 2019 உலகக் கோப்பை செமி ஃபைனல் மட்டுமின்றி 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரை சமீப காலங்களில் நாக் அவுட் போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்திப்பதற்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியது முக்கிய காரணமாக இருந்து வருகிறது. எனவே இம்முறை கோப்பையை வெல்ல வேண்டுமெனில் டாப் ஆர்டரில் விளையாடும் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்துவது அவசியமாகிறது.
இருந்த போதிலும் உலக கோப்பை போட்டியானது இந்தியாவில் நடந்தாலும் ஐபிஎல் போட்டியின் காரணமாக இங்குள்ள மைத்தனங்களின் தன்மை குறித்தும் இந்தியாவின் பந்துவீச்சாளர்கள் எப்படி இந்தியாவில் பந்துவீசுவார்கள் என்பது குறித்தும் நன்கும் தெரிந்து வைத்திருக்கின்றனர். இதனால் இந்த வருட உலக கோப்பை தொடரானது இந்திய அணிக்கு கடினமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் உலக கோப்பை தொடருக்கான அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து நாடுகளும் தங்களுடைய இறுதிக்கட்ட 15 பேர் கொண்ட அணியை செப்டம்பர் 5ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என ஐசிசி கெடு விதித்திருந்தது.. இந்நிலையில் 2023 உலகக்கோப்பை அணியை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மதியம் 1.30 மணிக்கு நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார்.
ரோகித் சர்மா கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் பேட்டிங் துறையில் சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிசான் ஆகியோருடன் காயத்திலிருந்து குணமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே போல ஒருநாள் கிரிக்கெட்டில் எப்போதுமே அசத்தாக சூரியகுமார் யாதவ் நம்பிக்கையுடன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களாக தேர்வாகியுள்ளனர்.
Here's the #TeamIndia squad for the ICC Men's Cricket World Cup 2023 🙌#CWC23 pic.twitter.com/EX7Njg2Tcv
— BCCI (@BCCI) September 5, 2023
அவர்களோடு மட்டுமல்லம்ல பேட்டிங்கை கருத்தில் கொண்டு ஷார்துல் தாகூருடன் பும்ரா, ஷமி, சிராஜ் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக தேர்வாகியுள்ளனர். அத்துடன் முதன்மை ஸ்பின்னராக குல்தீப் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் சிகர் தவான், புவனேஸ்வர் குமார், சஹால் மற்றும் சஞ்சு சாம்சன் வாய்ப்பு கிடைக்கவில்லை. அத்துடன் இந்த அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் போன்ற தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.



