
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் நேற்று 30வது போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பெங்களூரில் உள்ள சின்ன சாமி மைதானத்தில் மோதியது. பெங்களூரு அணி இதற்கு முன்பு நடந்த போட்டியில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. இந்த போட்டியும் அந்த வகை போட்டியில் ஒன்றாக மாறியது.

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன் பின் தான் அவருக்கு தெரிந்தது இது முற்றிலும் தவறான முடிவு என்று. ஆரம்பத்தில் இருந்தே ஹைதராபத் அணியின் வீரர்கள் தங்களது அதிரடியை கட்டி ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றையும் படைத்து இருந்தனர். அதாவது இதற்க்கு முன் இதே சீசனில் தான் ஹைதராபாத் அணி மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 277 ரன்களை அடித்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை அடித்த அணி என்ற சாதனையை படைத்தது.
அந்த சாதனையை இன்றைய பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் முறியடித்து இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 287 ரன்களை குவித்து புதிய சாதனை ஒன்றை படைத்தது. அதில் அபிஷேக் ஷர்மா நிதானமாக விளையாடி 33 ரன்னில் வெளியேறி இருந்தாலும் அதன் பின் அதிரடியை காட்டிய ஹெட் 41 பந்துகளில் 104 ரன்களை எடுத்து அவர் வெளியேற அதன் பின் க்ளாசென் 31 பந்துகளில் 67 ரன்களையும் அடித்து இருந்தார். சமத் 10 பந்துகளில் 30 ரன்களிலும் மார்க்ரம் 17 பந்துகளில் 32 ரன்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஹைதராபாத் அணி மட்டும் 22 சிக்சர்களையும் 19 பவுண்டரிகளையும் அடித்து இருந்தது.

இந்த அளவிற்கு ரன்களை வாரி வழங்கி இருந்தால் பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் எவ்வளவு மோசமாக பந்துவீசி இருப்பார்கள் என்று தெரியும். 288 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களான டு பிளசிஸ் மற்றும் விராட் கோலி இணைந்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுக்க முயற்சி செய்தனர். ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடி இருந்தாலும் அதன் பின் அவர்களால் சிறப்பாக அதனை எடுத்துச்செல்ல முடியவில்லை எனவே பெங்களூரு அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதில் அதிகபட்சமாக கேப்டன் டு பிளசிசிஸ் 28 பந்துகளில் 62 ரன்களை அடித்து இருந்தார். கோலியும் 20 பந்துகளில் 42 ரன்களை மட்டுமே எடுத்து இருந்தார். அதன் பின் மிடில் ஆற்டர் வீர்கள் அனைவரும் சொதப்பி வரவே தினேஷ் கார்த்திக் தனது அதிரடி ஆட்டத்தை காட்டி பெங்களூரு அணியை கடைசிவரை கொண்டு சென்றார். 35 பந்துகளில் 84 ரன்களை அடித்து பெங்களூரு அணிக்கு தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருந்தாலும் மக்களின் மனதை தினேஷ் கார்த்திக் வென்றுவிட்டார்.

இந்த போட்டியில் பல்வேறு சாதனைகள் உடைக்கப்பட்டது. அதில் முக்கியமான ஒன்று மும்பை அணிக்கு எதிராக தான் படைத்தது இருந்த அதிக ரன்கள் சாதனையை நேற்று ஹைதராபாத் அணி செய்து இருந்தது. அது மட்டுமல்லாமல் – இரண்டாவது பேட்டிங் செய்யும் போது ஐபிஎல்லில் அதிகபட்ச அணி ஸ்கோர், டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்தது , 50+ பவுண்டரிகளுடன் முதல் டி20 ஆட்டம் என பல சாதனைகள் நேற்றைய போட்டியில் செய்து இருந்தது.





