இந்திய அணி இந்த வருடம் அமேரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறும் உலகக்கோப்பை 2024க்காக இளம் வீரர்களை தயார் படுத்தி வருகிறது. அதற்க்கு முதற்கட்டமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 T20 தொடர்களை இந்தியாவில் விளையாட உள்ளது. அதில் நேற்று முதல் போட்டி மொகாலியில் நடைபெற்றது. இந்த தொடருக்கு இந்திய அணியின் முன்னனி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா 14 மாதங்களுக்கு பின் T20 இந்திய அணியில் அவர் இணைந்துள்ளார்.

இந்த தொடரில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக வெளியேறிய நிலையில் இந்த தொடரில் ரோஹித் ஷர்மா கேப்டனாக இந்திய அணியை வழி நடத்த உள்ளார். இதில் முதல் தொடரில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்து இருந்தது. இந்த மைதானத்தில் பனி சற்று அதிகமாக இருந்ததால் வீரர்களுக்கு போட்டி சற்று கடினமாகவே தான் இருந்தது. ஆப்கானிஸ்தான் அணி முதல் ஓவரில் எந்த ரன்னையும் அடிக்கவில்லை.
அதன் பின் நிதானமாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 158 ரன்களை குவித்து இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணியின் அதிகபட்சமாக முகமது நபி 42 ரன்களும் ஓமர்சாய் 29 ரன்களும் மற்றும் சார்டன் 25 ரன்களையும் அடித்து இருந்தனர். இந்திய அணி சார்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளையும் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் சிவம் துபே 1 விக்கெட்டையும் அவர் வீழ்த்தி இருந்தார்.

159 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை பெற்று வெற்றி பெற்றது. இந்திய அணியின் அதிகபட்சமாக ஷிவம் துபே 60 ரன்களும் ஜிதேஷ் ஷர்மா 31 ரன்களும் திலக் வர்மா 26 ரன்களும் எஅடித்து இருந்தனர். இறுதியில் வந்து ரிங்கு சிங் சிறப்பாக செயல்பட்டு 9 பந்துகளில் 16 ரன்களையும் அவர் அடித்து இருந்தார். ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளும் ஓமர்சாய் 1 விக்கெட்டையும் அவர் வீழ்த்தி இருந்தார். எனவே இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் அணியில் ஜடேஜா இல்லாததால் அவருக்கு பதில் அக்சர் பட்டேல் அணியில் இணைந்தார். அக்சர் பட்டேல் எவ்வளவு சிறப்பாக செயல் பட்டாலும் அவருக்கான இடத்தில் ஜடேஜா நீண்ட காலமாக இருந்து வருகிறார். இது குறித்து அக்சர் பட்டேல் கூறுகையில், என்னை எப்படி சிறந்த நிலையில் வைத்திருக்க முடியும் என்று யோசிக்கிறேன். ஆஸ்திரேலிய தொடரில் இருந்து மீண்டும் நம்பிக்கையை முன்னெடுத்து வருகிறேன்.

மேலும் காயம் நீங்கி மீண்டும் வாருங்கள். எனது பந்துவீச்சில் வித்தியாசமான விஷயங்களைச் சேர்ப்பதில் நான் உழைத்தேன். ஹர்திக் பாண்டியா மற்றும் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி பாணியில் வித்தியாசம் இருந்தது. செயல்முறைக்கு கவனம் செலுத்துவது முக்கியம். உடற்தகுதியின் கீழ் செயல்திறன் குறித்த இந்த சவாலில். நேர்மறையாக இருப்பது முக்கியம்.





