
உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்த ஐபிஎல் 2024 தற்போது மார்ச் 22 முதல் தொடங்கும் தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய 18-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் பலப்பரிட்சை செய்தது.சென்னை அணி இதற்க்கு முன்பு நடந்த 3 போட்டிகளில் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று கடந்த டெல்லி அணிக்கான போட்டியில் தோல்வியை தழுவிய இந்த போட்டியில் விளையாடியது.

அதேபோல் ஹைதராபாத் 3 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றும் இருந்தது. இன்றைய போட்டியில் களம் இறங்கியது இந்த இரு அணிகளும் கடந்த போட்டியின் தோல்வியிலிருந்து மீள வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வந்தது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து இருந்தார். அதன் படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டர்கள் ஆரம்பத்திலிருந்து சற்று தடுமாறி கொண்டு விளையாடினார்கள்.

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இரச்சின் மற்றும் ருதுராஜ் அதிக அளவில் ரன்களை குவிக்காமல் சொற்ப ரன்களில் வெளியேற சென்னை அணி மிகவும் பதற்றமான நிலையில் சென்றது. அதன் பின்பு மிடில் ஓவரில் வந்த சிவம் துபே அவரது அதிரடி திறமையை அடித்துக்காட்டிருந்தார். அதன் மூலம் தான் சென்னை அணிக்கு ஓர் அளவாவது ரன்களை எட்ட முடிந்தது என்றும் கூறலாம். அதன் பின்பு அந்த எந்த வீரர்களும் ரன்களை அடித்து குவிக்காததால் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 165 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது.
அதில் அதிகபட்சமாக சிவம் துபே மட்டும் 24 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து இருந்தார். அதில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்சர்களும் அடங்கும். அதற்கு அடுத்தபடியாக ரகானே 30 பந்துகளை 35 ரன்களையும் அவர் அடித்திருந்தார். அதேபோல் ஜடேஜாவும் 23 பந்துகளில் 31ரன்களை எடுத்து இருந்தார். இருப்பினும் சென்னை அணியால் 165 ரன்கள் அடிக்க முடிந்தது. அதன் பின்பு பேட்டிங் செய்ய வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பம் முதலே அவர்களது அதிரடியை காட்ட தொடங்கினர்.

ஹைதராபாத் அணி சென்னை அணியின் ரன்களை 18.2 ஓவர்களிலே எட்டி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. அதில் அதிக பட்சமாக மார்க்ரம் 50 ரன்களும் அபிஷேக் ஷர்மா 37 ரன்களும் ஹெட் 31 ரன்களையும் அடித்து இருந்தது. எனவே ஹைதராபாத் அணி சென்னை அணியை ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் ஹைதராபாத் அணி புள்ளி பட்டியலில் 4 இடத்திற்கு சென்றுள்ளது.





