
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் மார்ச் 33 முதல் இந்தியாவில் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 42வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பஞ்சாப் கிங்க்ஸ் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது. பஞ்சாப் அணி கடந்த போட்டியில் தோல்வியை தழுவி இருந்தது. ஆனால் கொல்கத்தா அணி கடந்த போட்டியில் கொல்கத்தா அணி கடந்த போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி இருந்தது.

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்களை குவித்து இருந்தது. இவ்வளவு பெரிய இலக்கிற்கு காரணம் என்னவென்றால் நரேன் மற்றும் சால்ட்டின் சிறப்பான தொடக்கம் தான். கொல்கத்தா அணி சார்பில் சால்ட் 75 ரன்களும் நரேன் 71 ரன்களையும் அடித்து இருந்தனர். அதன் பின் வெங்கடேஷ் ஐயர் 39 ரன்களை அடித்து இருந்ததார். பஞ்சாப் அணி சார்பில் பந்து வீச்சாளர்கள் சற்று சுமாராக தான் பந்து வீசி இருந்தார்கள். அர்ஷ்தீப் சிங் இரண்டு விக்கெட்டுகளையும் சாம்கரன் ஹர்ஷால் படேல் மற்றும் ராகுல் சகார் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.
அதன் பின் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி ஆரம்பத்தில் இருந்தே தங்களது அதிரடியை காட்டி விளையாடி இருந்தார்கள். அதன் மூலம் இமாலய இலக்காக 262 ரன்களை அடித்து வரலாற்று சாதனை ஒன்றை படைத்தது.பஞ்சாப் அணி இந்த இலக்கை எட்டாது என்று நினைத்து கொண்டு இருந்த பலரும் இந்த போட்டியை பார்த்து உறைந்து போய் இருப்பார்கள்.இதில் அதிக பட்சமாக ஜானி பேர்ஸ்டோவ் 108 ரன்களும் ஷஷாங்க் சிங் 68 ரன்களும் பிரப்சிம்ரன் 54 ரன்களிலும் ரூசோ 26 ரன்களையும் எடுத்து இருந்தனர்.
5️⃣2️⃣3️⃣ runs.
— Chennai Super Kings (@ChennaiIPL) April 26, 2024
4️⃣2️⃣ Sixes.
Out of the world game! 🤩#KKRvPBKS pic.twitter.com/CAbSfbJ4rF
இந்த ஒரு போட்டியில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டது. T20 வரலாற்றில் 262 ரன்களை சேஸ் செய்த முதல் அணி என்ற பெருமையும் ஒரே போட்டியில் இரு அணிகளும் சேர்த்து அடிக்கப்பட்ட சிக்சர்களில் இந்த இரு அணிகள் தான் முன்னிலையில் இருந்து வருகிறது அதில் 42 சிக்சர்கள் அடிக்கப்பட்டது. இவ்வளவு பெரிய இமாலாய இலக்கை 8 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அனைவரையும் அதிர வைத்து இருந்தது.இதை பார்த்து அதிர்ந்து போன சென்னை அணி நிர்வாகம் முதல்வன் படத்தில் மணிவண்ணன் கூறும் வசனம் போல் இது என்ன புது டிவிஸ்ட் ஆஹா இருக்கே என்ற வசனத்தை எக்ஸ் தலத்தில் பதிவு செய்து இருந்தார்கள்.
Nandri! 🙏
— Punjab Kings (@PunjabKingsIPL) April 26, 2024
Viraivil sandhipom 👀🤝 https://t.co/Ql8e73IG8w pic.twitter.com/f1XtKaUfR9
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பஞ்சாப் அணி அதே படத்தில் அர்ஜூன் கைகளை உயர்த்துவது போல ஒரு புகைப்படத்தை பதிவேற்றி இது விரைவில் சிந்திப்போம் என்றும் அவர் அதற்க்கு ரீப்ளே செய்து இருந்தார்கள். இதற்க்கான காரணம் சென்னை அணி அடுத்ததாக ஹைதராபாத் அணியை நாளை மோதிவிட்டு அடுத்தடுத்து (மே 1 மற்றும் மே 5 ) இரண்டு போட்டிகளை பஞ்சாப் அணியிடம் மோத உள்ளது சென்னை அணிக்கு அந்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அவர்களால் ப்ளே ஆப்பிற்கு தகுதி பெற முடியும்





