இந்திய இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. அதில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய கே.எல் ராகுல் காயம் காரணமாக அதன் பின் விலகினார். அதன் பின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கே.எஸ். பரத் விளையாடினார். ஆனால் அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை.

அதன் பின் மூன்றாம் மற்றும் நான்காம் போட்டிகளில் பரத்திற்கு பதிலாக ஜுரெல் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டார். அவரது தனது சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்.மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 46 ரன்களும் 4வது போட்டி முதல் இன்னிங்சிலும் 90 ரன்களும் இரண்டாவது இன்னிங்க்ஸில் 39 ரன்களையும் அவர் அடித்து இருந்தார். அது மட்டும் அல்லாமல் அவர் விக்கெட் கீப்பிங்கும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். நான்காவது போட்டியில் கில் மற்றும் ஜுரேல் இணைந்து இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.

இது குறித்து இந்திய அணியின் முன்னால் வீரர் சுனில்கவாஸ்கர் கூறுகையில், “மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா ஆஸ்திரேலியாவில் பல பெரிய பெயர்களை கொண்ட வீரர்களை தவறவிட்டது, ஆனால் அவர்கள் கப்பாவில் மட்டும் அற்புதமான வெற்றியைப் பெற முடிந்தது. அடிலெய்டில் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பிறகு அவர்கள் மெல்போர்னில் வென்றனர் மற்றும் சிட்னியில் டிரா செய்தனர். அவர்கள் கடுமையாகப் போராடினர். சிட்னி டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் அரை மணி நேரம் கிரீஸில் நின்றிருந்தால் அந்த போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றிருக்கலாம்.
ஆனால் அந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது இந்திய இளம் வீரர்கள் காட்டிய முறை இங்கிலாந்துக்கு எதிராகவும் தெரிகிறது. அதனால்தான் நான் எப்போதும் சொல்கிறேன், உங்களுக்கு பெரிய பெயர்கள் கொண்ட வீரர்கள் தேவையில்லை… அவர் இல்லாமல் இந்தியா வெல்லாது என்று எந்தப் பெரிய பெயரும் நினைத்தால், நீங்கள் இருக்கிறீர்களோ இல்லையோ, கிரிக்கெட் என்பது ஒரு குழு விளையாட்டு என்பதை இந்த இரண்டு தொடர்களும் காட்டியுள்ளன.

இது ஒரு தனி நபரைச் சார்ந்தது அல்ல, கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் அணியை நிர்வகித்த விதத்திற்கு பெருமை செல்ல வேண்டும். அவர்கள் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து, அவர்களை வடிவமைத்து, அவர்களின் இயல்பான ஆட்டத்தை விளையாட ஊக்கப்படுத்தினர். நமக்கு பெரிய பெயர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், பெரிய இதயம் கொண்ட வீரர்கள் இருந்தால் நாம் வெற்றி பெறலாம் என்பதை இது காட்டுகிறது” என்று கவாஸ்கர் கூறினார்.





