உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலகக்கோப்பை 2023 தற்போது இந்தியாவில் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று இறுதி போட்டியுடன் முடிவடைந்தது. இன்றைய உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் தற்போது நரேந்திர மோடி மைதானத்தில் முடிவடைந்தது. இந்திய அணி லீக் போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்று பலம் வாய்ந்த அணியாக இன்று ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடி வருகின்றது. ஆஸ்திரேலியா அணி ஆரம்பத்தில் 2 போட்டிகளில் மட்டுமே தோல்வியை தழுவி இருந்தாலும் அதன் பின் நடந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றியை பதித்து இன்று இந்திய அணியை எதிர்த்து விளையாடி வருகின்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பௌலிங் செய்வதாக தேர்வு செய்தார். அது அவர்களுக்கு சொல்லி கொள்ளும் வகையில் சிறப்பாகவே அமைந்தது. இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுப்மான் கில் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் போட்டியின் ஆரம்பத்திலேயே அவர்களது விக்கெட்டை இழந்து வெளியேறினார். சுப்மான் கில் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் நான்கு ரன்களை எடுத்த நிலையில் ஆட்டம் வந்து வெளியேறினார்கள்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆரம்பத்தில் சுப்மான் கில் தந்து விக்கெட்டை இழந்து வெளியேறி இருந்தாலும் அவர் அவருடைய ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவர் 31 பந்துகளில் 4பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சருடன் 47 ரன்கள் இருந்த நிலையில் மேக்ஸ்வெல் வீசிய பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஷ்ரேயஸ் ஐயர் ஸ்பின் பந்துவீச்சாளர்களை சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இந்திய அணிக்கு 4 ரன்னில் வெளியேறி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தார்.

அதே போல் தான் சுப்மான் கில்லுக்கு அகமதாபாத் மைதானம் அவருடைய நெருக்கமான மைதானம் மற்றும் இந்திய அவர் ஐபிஎல் போட்டிகளில் அந்த மைதானத்தில் விளையாடி இருக்கின்றார் என பலர் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் விராட் கோலி 54 ரன்களிலும் கே.எல் ராகுல் 66 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் வந்த வீரர்கள் யாரும் ரன்களை குவிக்க தவறிய நிலையில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களை மட்டுமே குவித்தது.

241 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி ஆரம்பத்தில் சிறிய தடுமாற்றம் இருந்தாலும் அதன் பின் ட்ராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி இந்திய அணியை எளிதாக இறுதிப் போட்டியில் வென்றனர். ஆஸ்திரேலியா அணியின் அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 137 ரன்களும் மார்னஸ் லாபுசாக்னே ரன்களும் மார்ஷ் 15 ரன்களையும் அடித்து ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி எளிதாக வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் பும்ரா 2 விக்கெட்டுகளையும் ஷமி 2 விக்கெட்டையும் மட்டுமே வீழ்த்தி இருந்தன. ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்களை எடுத்தது 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணி 6 முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றி பலம் வாய்ந்த அணியாக இருக்கின்றது. இந்திய அணி லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது.



