டேவிட் வார்னர் சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தனது கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக தனது பச்சை நிற பையை அவர் இழந்துள்ளார். இன்று அந்த பையை குறித்து திருப்பி தருமாறு அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு வேண்டுகோள் விடுத்து இருந்தார்.ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இந்த வாரம் பாகிஸ்தானுக்கு எதிரான தனது பிரியாவிடை டெஸ்டுக்கு முன்னதாக ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார்.

ஆனால் தேவைப்பட்டால் 2025 சாம்பியன்ஸ் டிராபியை விளையாடுவதற்கான என்னை அழைத்தால் நான் அதில் விளையாடுவதற்கு தயாராக இருப்பேன் என்றும் அவர் கூறியிருந்தார். 37 வயதான அவர் புதன்கிழமை தனது சொந்த நகரமான சிட்னியில் தனது 112வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை அவர் விளையாடினார். அவர் இது வரை 26 சதங்கள் மற்றும் 36 அரை சதங்களுடன் 44.58 சராசரியில் 8,695 ரன்களைக் கொள்ளையடித்தார்.
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், அவர் ODIகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார், புதன்கிழமை தொடங்க திட்டமிடப்பட்ட பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்காக மெல்போர்னில் இருந்து சிட்னிக்கு பயணம் செய்யும் போது தொப்பி காணாமல் போனதை அடுத்து அவர் அதை திருப்பி தருமாறு வீடியோ ஒன்றை பதிவேற்றி இருந்தார். இது குறித்து வீடியோவில் அவர் கூறுகையில்,

அனைவருக்கும் வணக்கம், இது எனது கடைசி முயற்சி, ஆனால் எனது பேக்கி கிரீன் அடங்கிய எனது பேக் பேக்கில் இருந்து எனது பொருட்கள் எடுக்கப்பட்டது,அந்த தொப்பி எனக்கு உணர்ச்சி பூர்வமானது. அந்த தொப்பியுடன் தான் நான் கடைசி முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாட விரும்புகிறேன். ஒருவேளை எனது பேக் உங்களுக்கு வேண்டுமென்றால், அதேபோல் என்னிடம் மற்றொரு பேக் உள்ளது. தாராளமான அதனை கொடுக்க தயாராக உள்ளேன். உங்களுக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது.
View this post on Instagram
தொப்பியை மீண்டும் பெற்றாலே மகிழ்ச்சி தான் என்று பதிவிட்டுள்ளார். அது அவர்களுக்கு மிகவும் சிறப்பானது. என்னென்றால் கடைசி டெஸ்ட் போட்டியின் போது ஒரு பச்சை நிற தொப்பியை வழங்குவார்கள். அந்த தொப்பியை அணிந்து தான் அவர்கள் அந்த கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடுவார்கள். அதை அவர்களை பாதுகாத்து வைத்துக்கொள்வார்கள். இது அவர்களின் ஒரு பழக்கமாக இருகின்றது.




