
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் முதல் டெஸ்ட் போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள உப்பிலி மைதானத்தில் கடந்த 25 ஆம் தேதி அன்று நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தது. முதல் இன்னிங்க்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களை மட்டுமே இங்கிலாந்து அணி அடித்திருந்தது. அதில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 70 ரன்களும் ஜானி பேர்ஸ்டோ 37 ரன்களும் டக்கட் 35 ரன்கள் அடித்து இருந்தனர்.

முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 436 ரன்களை குவித்து இருந்தது. இதில் இந்திய அணி அதிகபட்சமாக ஜடேஜா 87 ரன்களும் கேஎல் ராகுல் 86 ரண்களும் ஜெய்ஸ்வால் 80 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களை சிதறடித்திருந்தனர். 190 ரன்களை முன்னிலையில் இந்திய அணி இன்னிங்க்சை நிறைவு செய்து இருந்தது. அதன் பின் இரண்டாவது இன்னிங்க்ஸில் தங்களது பேஸ்பால் ஆட்டத்தை இந்த போட்டியில் அவர்கள் நிரூபித்தனர். நாளில் அதாவது இன்று அவர்கள் 420 ரன்கள் குவித்து விருந்தினர்.
எனவே இந்திய அணிக்கு 230 ரன்கள் இலக்காக நிர்ணயித்து இருந்தது இங்கிலாந்து அணி. தற்போது இந்திய அணி ரோஹித் ஷர்மா மற்றும் ஜெயஸ்வால்லின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்து இருந்தாலும் அதன் பின் இந்திய அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்து வந்தது. எனவே நாள் முடிவதற்கு உள்ளது இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்கள் மட்டுமே அடித்தது. எனவே இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் இன்றைய நாளில் சிறப்பாக செய்தனர். டாம் ஹார்ட்லி 7 லீச் மற்றும் ரூட் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.இதன் மூலம் இங்கிலாந்து அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.இதில் இந்திய அணி தோல்வியை தழுவி இருந்த நிலையில் இந்திய அணிக்கு அடுத்தடுத்து பெரும் சோகமாக செய்திகளே வந்த வண்ணம் உள்ளது அதில் முதலாவது என்னவென்று பார்த்தால் போட்டியில் விதிமுறைக்கு மாறாக நடந்து கொண்டதற்காக பும்ராவுக்கு அபராதம் அளிக்கப்பட்டுள்ளது.
Jasprit Bumrah has been handed 1 Demerit Point for deliberately coming in Ollie Pope's way. pic.twitter.com/o8gBzC0wjP
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 29, 2024
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதற்காக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஒரு குறைபாடு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸின் 81வது ஓவரில் நடந்தது, பும்ரா ரன் எடுக்க முயன்றபோது ஒல்லி போப்பின் வழியில் “வேண்டுமென்றே” நின்றார். அதற்காக ஜஸ்பிரித் பும்ரா வேண்டுமென்றே ஒல்லி போப்பின் வழியில் வந்ததற்காக 1 டிமெரிட் புள்ளியை வழங்கியுள்ளார்.





