
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் மார்ச் 33 முதல் இந்தியாவில் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று 42வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பஞ்சாப் கிங்க்ஸ் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது. பஞ்சாப் அணி கடந்த போட்டியில் தோல்வியை தழுவி இருந்தது. ஆனால் கொல்கத்தா அணி கடந்த போட்டியில் கொல்கத்தா அணி கடந்த போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி இருந்தது.

இன்றைய போட்டியில் இரு அணிகளும் தனங்களது ஆதிக்கத்தை செலுத்தி இருந்தனர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து இருந்தார். அதன் படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி ஆரம்பம் முதலே பில் சால்ட் மற்றும் சுனில் நரேன் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்து இருந்தனர். அதன் பின் வந்த வீரர்களும் அந்த வேகத்தை அப்படியே கொண்டு சென்றனர். அதே போல் தான் பஞ்சாப் அணியின் வீரர்களும் பேட்டிங் செய்யும் போது அதிரடியை காட்டி இருந்தார்கள்.

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்களை குவித்து இருந்தது. இவ்வளவு பெரிய இலக்கிற்கு காரணம் என்னவென்றால் நரேன் மற்றும் சால்ட்டின் சிறப்பான தொடக்கம் தான். கொல்கத்தா அணி சார்பில் சால்ட் 75 ரன்களும் நரேன் 71 ரன்களையும் அடித்து இருந்தனர். அதன் பின் வெங்கடேஷ் ஐயர் 39 ரன்களை அடித்து இருந்ததார். பஞ்சாப் அணி சார்பில் பந்து வீச்சாளர்கள் சற்று சுமாராக தான் பந்து வீசி இருந்தார்கள். அர்ஷ்தீப் சிங் இரண்டு விக்கெட்டுகளையும் சாம்கரன் ஹர்ஷால் படேல் மற்றும் ராகுல் சகார் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.
அதன் பின் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி ஆரம்பத்தில் இருந்தே தங்களது அதிரடியை காட்டி விளையாடி இருந்தார்கள். அதன் மூலம் இமாலய இலக்காக 262 ரன்களை அடித்து வரலாற்று சாதனை ஒன்றை படைத்தது.பஞ்சாப் அணி இந்த இலக்கை எட்டாது என்று நினைத்து கொண்டு இருந்த பலரும் இந்த போட்டியை பார்த்து உறைந்து போய் இருப்பார்கள். இதில் அதிக பட்சமாக ஜானி பேர்ஸ்டோவ் 108 ரன்களும் ஷஷாங்க் சிங் 68 ரன்களும் பிரப்சிம்ரன் 54 ரன்களிலும் ரூசோ 26 ரன்களையும் எடுத்து இருந்தனர்.

இந்த ஒரு போட்டியில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டது. T20 வரலாற்றில் 262 ரன்களை சேஸ் செய்த முதல் அணி என்ற பெருமையும் ஒரே போட்டியில் இரு அணிகளும் சேர்த்து அடிக்கப்பட்ட சிக்சர்களில் இந்த இரு அணிகள் தான் முன்னிலையில் இருந்து வருகிறது அதில் 42 சிக்சர்கள் அடிக்கப்பட்டது. இவ்வளவு பெரிய இமாலாய இலக்கை 8 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அனைவரையும் அதிர வைத்து இருந்தது





