உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று 25 வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதியது. இந்த இரு அணிகளும் இந்த சீசனில் ஒரே ஒரு வெற்றியை தான் பெற்று இருந்தார்கள். இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இரு அணிக்கும் இருந்தது. அதில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன் படி பேட்டிங் செய்த பெங்களூரு அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி தான் விளையாடி வந்தது. இருப்பினும் மிடில் ஆர்டரில் அவர்கள் சற்று தடுமாறி விளையாடவே ரன்கள் மெதுவாக அந்த இடத்தில் குறைந்தது. ஆனால் ஆதன் பின் தினேஷ் கார்த்திக் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். எனவே பெங்களூரு அணி 20வது ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை குவித்து இருந்தது. ஆரம்பத்தில் விராட் கோலி அதிக அளவில் ரன்களை குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்3ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அறிமுக வீரர் வில் ஜாக்ஸ் 8 ரன்னில் வெளியேற அதன் பின் வந்த படிதார் தனது அதிரடி ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தார். 26 பந்துகளில் 61 ரன்களை அவர் அடித்து இருந்தார். அதன் பின் டு பிளசிஸ் 61 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் எந்த வீரரும் இரண்டிலக்க ரன்களை கூட அடிக்க முடியவில்லை. இறுதியில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 53 ரன்களை அவர் அடித்து இருந்தார். அவரது ஆட்டம் காரணமாக தான் பெங்களூரு அணி 196 ரன்களை குவிக்க முடிந்தது.

இந்த போட்டியின் இடையில் நடுவர்கள் செய்த செயல்கள் அனைத்தும் மும்பை அணிக்கே சாதகமாக இருந்தது. அதாவது அவரது முடிவுகள் நடுநிலை தன்மையாக இல்லாமல் இருந்தது. அதாவது பெங்களூரு அணியின் வீரர் அடித்த பந்து பவுண்டரிக்கு சென்றது அப்போது அதை தடுத்த மும்பை அணியின் வீரர் அந்த பவுண்டரி லைனில் அவரது கால்கள் பட்டு இருந்தது. நடுவர்கள் அதை சரி பார்க்காமல் அது பவுண்டரி இல்லை என மோசமான முடிவை வழங்கி இருந்தார்கள். மும்பை அணி இரண்டு REVIEW களையும் இழந்த பின் பந்து பேட்டில் பட்டது என இஷான் கிஷான் appeal செய்து இருந்தார்.
ஆனால் நடுவர்கள் அது பேட்டில் படவில்லை என உறுதியாக முதலில் இருந்தனர். இருப்பினும் அதன் பின் மும்பை அணி 2 REVIEWகளையும் இழந்த பின் அவர்களுக்கு உதவி செய்வது போல நடுவர்கள் அவர்களே REVIEW செய்து இருந்தனர். இருப்பினும் அது பேட்டில் பந்து படவில்லை. அதே போல் இறுதி ஓவரை வீசிய மேத்வால் தினேஷ் கார்த்திக்கிற்கு இடுப்பிற்கு மேல் ஒரு பந்த வீசினார் அனால் அதக்கு களநடுவர் நோ பால் வழங்க வில்லை அதன் பின் தினேஷ் கார்த்திக் அதை REVIEW கேட்க அதற்க்கு மூன்றாம் நடுவர் தினேஷ் கார்த்திக்கின் உயரம் எல்லாம் கணக்கில் கொண்டால் அது நோ பால் இல்லை என வழங்கி இருந்தார்.
After first innings, Virat Kohli was seen talking to Umpire for No ball but Umpire Indians already did their job. 👏#MIvsRCB #RCBvsMI
— Akshat (@AkshatOM10) April 11, 2024
pic.twitter.com/TEC7wGB8nn
இதை பார்த்த தினேஷ் கார்த்திக் போட்டி முடிந்த பின் அதை நடுவர்களிடம் கேட்டு இருந்தார்கள். அதன் பின் விராட் கோலி அவரிடம் சிறப்பான அம்ப்பைரிங் என அவரிடம் கிண்டல் செய்வது போல கூறி இருந்தார். இது போன்ற நிகழ்வுகள் இதற்க்கு முன்பு பல முறை நடந்து உள்ளது. மும்பை அணி தற்போது இரண்டு விக்கெட்டுகளை இழந்து 151 ரன்னில் விளையாடி வருகிறது





