
அக்சர் பட்டேல் துரதிஷ்டவசமான வீரர் என்று அபினவ் முகுந்த் தற்போது கூறியுள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் உலக கோப்பை 2023 இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் தற்போது 5 தொடர்களைக் கொண்ட டி20 போட்டிகளில் இந்தியா அணி தற்போது விளையாடி வருகிறது. அதில் நேற்றுடன் நான்கு போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இந்திய அணி மூன்றில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது. ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியில் இருந்த உலகக் கோப்பை பிறகு ஷ்ரேயஸ் ஐயர் இந்த போட்டியில் களம் இறங்கி விளையாடினார்.

இருப்பினும் இந்த போட்டியில் இந்திய அணி கேப்டனாக சூரியகுமார் யாதவர் தான் செயல்பட்டு வந்தார். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணி அதிகபட்சமாக ரிங்கு சிங் 46 ரன்களும் ஜெயஸ்வால் 37 ரன்களுக்கும் ருதுராஜ் கெய்க்வாட்32 ரன்களுக்கு மட்டும் எடுத்து வெளியேறினார். இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னில் ஆட்டமிருந்து வெளியே அனுப்பி ஏமாற்றத்தை அளித்தார்.
உலக கோப்பை போட்டிக்குப் பிறகு அணிக்கு திரும்பிய ஷ்ரேயஸ் ஐயரும் பெரிதாக ஜொலிக்கவில்லை. எனவே இந்தியா 174 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. ஆஸ்திரேலியா அணியின் சார்பில் பென் துவர்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளையும் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் மற்றும் சங்கா இரண்டு விக்கெட்டுகளையும் ஆரோன் ஹார்டி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். 175 ரன்கள் இலக்காக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலியா ஆரம்பத்தில் இந்திய அணி வீரர்களுக்கு சற்று பயத்தை தந்தது. இருப்பினும் இந்திய அணி இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 20 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணியின் சார்பில் அதிகபட்சமாக வேட் 36 ரன்களுக்கும் ஹெட் 31 ரன்களும் ஷார்ட் 19 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இந்திய அணி சார்பில் அக்சர் பட்டேல் மூன்று விக்கெட்டுகளையும் தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும் ஆவேஷ் கான் மற்றும் ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டை இருந்தனர் எனவே இந்திய 20 ரன்களுக்கு வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது இந்திய அணி. இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய தூணாக இருந்த அக்சர் பட்டேல் பற்றி அபினவ் முகுந்த் சிலவற்றை கூறியிருந்தனர்.
நேற்றைய போட்டியில் ஒவ்வொரு பந்துவீச்சாளர்களுக்கும் மிக அழுத்தமாக இருந்தது. அதில் அக்சர் பட்டேல் சிறப்பாக பந்து வீசி பேட்ஸ்மன்களுக்கு அழுத்தத்தை தந்தார். அவர் நேற்றைய போட்டியில் மிகவும் ரசித்து விளையாடினார். என்னை கேட்டால் அவர் தான் துரதிஷ்டவசமான வீரர் என்றால் அது அவர் தான் நான் கூறுவேன். அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் தன்னால் முடிந்த வரை சிறப்பாகவே செய்து வருகிறார். அவர் காயத்திலிருந்து மீண்டு வந்து பந்தை மெதுவாக வீசி வருகிறார்.

ஆனால் அவர் பேட்ஸ்மேன்கள் எளிதாக அடிக்கும் வகையில் பந்துகளை வீசுவதில்லை. நேற்றைய போட்டியில் அவர் 16 ரன்களை மட்டுமே அளித்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். நான் ஏன் நான் ஒருத்தரை துரதிஷ்டவசமான வீரர் என்று கூறுகிறேன். என்றால் இவ்வவளவு சிறப்பாக செயல்பட்டும் அவருக்கு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியில் அவருக்கு இந்திய அணியில் இடம் அளிக்கவில்லை. தன்னால் முடிந்தவரை சிறப்பாக செய்ததும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறியிருந்தார்.





