
உலக கோப்பை 2023 தொடரானது சமீபத்தில் இந்தியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது. ஆனால் துரதிஷ்ட வசமாக இந்திய கிரிக்கெட் அணியின் கேட்ட நேரம் தொடர்ந்து கொண்டே வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக ஐசிசி கோப்பை ஒன்றை கூட இந்திய அணியால் வெல்ல முடிவயில்லை. அது இந்த வருடம் மாறும் என்றிருந்த நிலையில் தொடர்கதையாக மீண்டும் தொடங்கியுள்ளது.

இருந்த போதிலும் அடுத்த வருடம் டி20 உலக கோப்பை போட்டியானது நடக்க இருப்பதினால் இந்தியா அதில் இந்தியா சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு பல ஏற்பாடுகளையும் இந்திய அணி தீவிரமாக செய்து வருகிறது. குறிப்பாக இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி சோதனை செய்து வருகிறது.
அதன் முதல் படியாக இந்தியா vs ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா விளையாடி வருகிறது. அதில் ஜெய்ஸ்வால், திலக் வர்மா, கெய்க்குவாட் போன்ற இளம் வீரக்ளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் இதற்கு அடுத்து வரும் தென்னாபிரிக்க தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் , கேஎல் ராகுல் (வி.கே), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகேஷ் குமார், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா , பிரசித் கிருஷ்ணா.
அணி தேர்வு செய்யப்பட்ட பிறகு பலர் ஜடேஜா டெஸ்ட் அணியில் இருப்பதால் மட்டுமே அஷ்வின் அணியில் இருகின்றார் என்றும் பலர் கூறிவந்த நிலையில் அதற்க்கு அஷ்வின் பதிலளித்து உள்ளார். அவர் கூறுகையில் தற்போதைய கிரிக்கெட் உலகத்தின் விராட் கோலி மிகவும் கவர்ச்சிகரமான பலரால் இருக்கப்பட்டிருக்கிறார். நான் எந்த வீரரையும் பார்த்து பொறாமை படவில்லை. ஆனால் நான் பார்த்து பொறாமைப்படும் ஒரே நபர் ஜடேஜா மட்டும் தான்.

உங்களில் யார் சிறந்தவர் என்பது குறித்து எங்களிடம் இன்று காலமாகவே போட்டியிருந்து வருகின்றது. ஆனால் உண்மை என்னவென்றால் ஒருவர் இல்லை என்றால் இன்னொருவர் கிடையாது. அஸ்வின் இல்லாமல் ஜடேஜா கிடையாது. ஜடேஜா இல்லாமல் அஸ்வின் கிடையாது அவர் எதையும் அதிகமாக சிந்திக்க மாட்டார். ஆனால் நான் கிடையாது நான் எப்போதும் ஏதாவது சிந்தித்துக் கொண்டே இருப்பேன். இந்த வகையில் நாங்கள் இருவரும் வித்தியாசமானவர்கள் தான். ஆனால் நாங்கள் போட்டியில் சிறந்த பார்ட்னராக இருந்த விளையாட ஒரு உன்னதமான நிகழ்வு என்று அவர் கூறியிருந்தார்.





