இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலியும் 2022 t20 உலகக்கோப்பைக்கு பின்னதாக எந்த ஒரு டி20 போட்டியை விளையாடவில்லை. அவர்கள் இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பையில் 20 அணிகள் கலந்துகொள்ள உள்ளது. இந்திய அணி இந்த உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருகிறது.

நடந்து முடிந்த உலகக்கோப்பையில் விராட் கோலி தான் அதிக ரன்களை அடித்துள்ளார். அதற்க்கு அடுத்த படியாக ரோஹித் ஷர்மா இரண்டாவது இடத்தில் இருந்துள்ளார். விராட் கோலி 765 ரோஹித் ஷர்மா 597 ரன்களும் அடித்துள்ளனர். அவர்கள் பேட்டிங்கில் சிறந்த பார்மில் இருந்து வருகின்றனர். 2022 உலகக்கோப்பைக்கு பின்னதாக ரோஹித் ஷர்மா t20 போட்டியில் விளையாடத நிலையில் ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்து வந்தார். தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான T20 தொடருக்கு அணியை அறிவித்துள்ளது.
இதில் சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் பல இளைஞர்கள் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் 14 மாதங்களுக்கு பிறகு ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி மீண்டும் இந்திய அணியில் இணைந்துள்ளனர். இதில் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளனர். மேலும் பும்ரா மற்றும் சிராஜ்க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறுகையில்,
இந்த அணியில் கேஎல் ராகுலின் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஷுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா ஆகியோர் இருப்பதால் தொடக்க நிலைக்கான சண்டை இருக்கும். எனவே அவர்களில் ஒருவர் வெளியே உட்கார வேண்டும். எல்லா சாத்தியக்கூறுகளிலும், யஷஸ்வியை வெளியே உட்காரச் சொல்லலாம், மேலும் கில் மூத்த வீரர் என்பதால் ரோஹித்தும் கில்லும் திறப்பார்கள். சீனியாரிட்டி அடிப்படையில் அவர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை விட முன்னணியில் உள்ளார். டி20 வடிவத்தில் அவர் கொஞ்சம் அதிகமாகவே ஏற்ற இறக்கம் காட்டுகிறார், அதுவும் உண்மைதான்.
ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் 2022 உலகக் கோப்பையில் இந்தியாவின் முதல் மூன்று இடங்களில் இருந்தனர். அவர்களில் கே.எல்.ராகுல் நீக்கப்பட்டாரா அல்லது தேர்வு செய்யப்படவில்லை என்பதில் தெளிவு இல்லை, ஆனால் அவர் இல்லை. அதுபற்றியும் விவாதம் நடத்தலாம். T20I களில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 135 ஐ விட அதிகமாக உள்ளது, அது மோசமாக இல்லை. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் காலியாக இருக்கும் தொடக்க நிலைகள் இல்லை, மேலும் ODIகளிலும் நீங்கள் அவரை நடுவில் விளையாடுகிறீர்கள், எனவே நீங்கள் அதை இங்கேயும் செய்திருக்கலாம். இப்போது டெஸ்டில் கூட நீங்கள் அவரை கீழே விளையாடுகிறீர்கள். இருப்பினும், நீங்கள் குறைந்தபட்சம் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று சொன்னீர்கள்.
What do you all make of this power-packed T20I squad set to face Afghanistan? 😎#TeamIndia | #INDvAFG | @IDFCFIRSTBank pic.twitter.com/pY2cUPdpHy
— BCCI (@BCCI) January 7, 2024
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் வீரர்கள், ரோஹித் ஷர்மா(c), சுப்மான் கில், ஜெயஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா, சஞ்சு சாம்சண் சிவம் துபே, வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் அணியில் உள்ளனர்.





