இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் இரண்டில் 1 – 1 என்ற கணக்கில் இரு அணிகளும் தொடரை சமன் செய்துள்ளது. அதில் இந்திய அணி இன்று சிறப்பான பந்து வீச்சின் வெளிப்பாடாக இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 396 ரன்களை குவித்து இருந்தது. இதில் இந்திய அணிக்கு ரன்களை குவிக்க காரணமாக இருந்தவர் ஜெய்ஸ்வால் தான். தனி ஒரு மனிதராக போராடி 209 ரன்களை அவர் குவித்து இருந்தார்.

அதன் பின் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணி 253 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மீண்டும் அதே நாளில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி 255 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் முக்கிய பங்கு வகித்தவர் கில் தான். 104 ரன்களை அடித்து இந்திய அணிக்கு பலத்தை சேர்த்து இருந்தார். அதன் பின் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 292 ரன்னில் விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணியிடம் தோல்வியை தழுவி இருந்தது. இந்த போட்டியில் குல்தீப் யாதவ் வீசிய பந்தில் க்ராலி LBW மூலம் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
இந்த தொடரில் இது வரை பெரிய இழப்பாக இருந்தது விராட் கோலி அணியில் இல்லாதது தான். அவர் தனிப்பட்ட காரங்களுக்காக முதல் இரண்டு தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். இருப்பினும் அவர் 15 ஆம் தேதி நடைபெறும் மூன்றாவதுபோட்டியில் அவர் விளையாடுவாரா என்றும் கேள்விகள் எழுந்து உள்ளது. இது குறித்து நசிர் ஹுசைன் கூறுகையில் இந்த தொடரில் கோலி மற்றும் ஜிம்மி ஆண்டர்சன் இடையேயான போர் மட்டும் காணாமல் போனதால் அவர் மீண்டும் வருவார் என்று நம்புகிறேன்.

நான் அதை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றேன். இந்தியாவைப் பற்றிய ஒரு விஷயம் என்னவென்றால், அவர்களின் நான்கில் மூன்றில் இன்னிங்ஸ் சற்று சொதப்பலாக இருந்தது. இங்கிலாந்திற்கு நாங்கள் முகமூடி கொடுத்துக்கொண்டே இருப்போம், இன்னும் இரக்கமற்றவர்களாக இருப்போம்’ என்று இந்தியா நினைக்கும். பேர்ஸ்டோ ஒரு சிறந்த வீரர், அவருடைய ஒரு தொடக்கத்தை மாற்ற வேண்டும். அது அவர் மட்டுமல்ல.

இங்கிலாந்து பேட்டர்கள் அனைவரும் வைசாக்கில் உள்ளே நுழைந்து மீண்டும் அவுட் ஆனார்கள். புரூக் இந்தியாவுக்குச் சென்றால் ஜானிக்குத் தெரியும். மருத்துவ ரீதியாகவும் பெரிய ஸ்கோரைப் பெறவும். ஆனால் இந்த இங்கிலாந்து அணி வீரர்கள் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது மற்றும் அவர்கள் பேர்ஸ்டோ மீது நம்பிக்கை காட்டுவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்று ஹுசைன் கூறினார்.





