இந்திய அணி 2024 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை தொடர்க்கும் முன்னதாக இங்கிலாந்து அணி இடம் ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரை இந்தியாவில் விளையாட உள்ளது. ஜனவரி 25 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கவுள்ள டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தின் எதிரான இந்திய அணி விளையாட உள்ளது. இதற்க்கு முன்னதாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தது.

இருப்பினும் இந்திய அணியால் அந்த தொடரை வெல்ல முடியவில்லை சமன் மட்டுமே படுத்தி இருந்தது. நாளை இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நாளை விளையாட உள்ளது. இங்கிலாந்து அணி தங்களது பேஸ் பால் ஆட்டத்தை இந்திய அணிக்கு எதிராக விளையாடுவோம் என்றும் அவர்களது வீரர்கள் பலர் கூறி வருகின்றனர். அதற்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பதில் அளித்து இருந்தார்.

“நாங்கள் எங்கள் கிரிக்கெட்டை விளையாடுவோம். எதிர் அணி எப்படி வேண்டுமானலும் விளையாடலாம், அதையெல்லாம் பார்ப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. எங்களைப் பொறுத்தவரை, நமது கிரிக்கெட்டைப் பார்ப்பது முக்கியம். ஒரு குழுவாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். எங்கள் அணியில் உள்ள இரண்டு கீப்பர்கள் [பாரத் மற்றும் ஜூரல்]. செயல்திறனைப் பார்த்து யார் சரியாக இருப்பார்கள் மதிப்பீடு செய்வோம்.
ஒவ்வொரு ஆட்டத்துக்குப் பிறகும் என்ன நடக்கிறது, அணிக்கு எது சரியானது என்பதை மதிப்பீடு செய்வோம். அணிக்கு எது சரியோ அது தேவையானதைச் செய்வோம். அஷ்வின் மற்றும் சிராஜ் எங்களுக்கு முக்கியமான வீரர்களாக உள்ளனர். சிராஜ் கடந்த இரண்டு வருடங்களில் தரவரிசையில் முன்னேறியுள்ளார். அவர் எங்களுக்காக பல்வேறு சூழ்நிலைகளில் தன்னை நிரூபித்துள்ளார். அவர் தனது ஆட்டத்தை வேறு லெவலுக்கு கொண்டு சென்றுள்ளார்.

அஸ்வின் கிளாஸ். அவருடைய தரம் எங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு முறையும் அவர் களம் இறங்கும்போது, நம் அனைவரையும் கவர்வதற்காக முனைகிறார்” என்று இந்திய கேப்டன் கூறினார்.அஸ்வின் 95 டெஸ்ட் போட்டிகளில் 490 விக்கெட்டுகளையும், சிராஜ் 23 போட்டிகளில் 68 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 500விக்கெட்டுகளை வீழ்த்த இன்னும் 10 விக்கெட்டுகள் மட்டுமே அஷ்வினுக்கு தேவை.





