நேற்று முன்தினம் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க இறுதிப்போட்டியில் இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா அணி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இதில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற ஆஸ்திரேலியா அணி இந்தியா அணியை எளிதாக வெற்றிக்கொண்டு மீண்டும் ஒருமுறை சாம்பியன் பட்டத்தை அதாவது 6 முறை கோப்பையை பெற்றது. இந்திய அணி நடைபெற்ற லீக் போட்டிகள் அனைத்திலும் மற்றும் அரையிறுதி சுற்றிலும் தொடர்ந்து வெற்றி பெற்ற இந்த இறுதி போட்டி மோதிக் கொண்டது.

ஆனால் இந்திய அணிக்கு துர்தவஷ்டமாக இறுதிப் போட்டி இந்திய அணிக்கு கைகொடுக்கவில்லை. அந்தப் போட்டியில் டாஸ் ஆஸ்திரேலியா அணி முதலில் பௌலிங் தேர்வு செய்தது. அதன் படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஒவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களை மட்டுமே குவித்து இருந்தது. ஆனால் இந்த இலக்கை ஆஸ்திரேலிய அணியின் மிக எளிதாக அடைந்தது. ஆஸ்திரேலியா அணியின் 43 ஒவர்களின் 241 ரன்களை எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் வெற்றி குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் பிரட் லீ கூறுகையில், எல்லோரும் இந்தியாவை உற்றுநோக்கி இருந்தோம் இந்தியா எப்படியும் வென்று வருவார்கள் என்று பலர் நினைத்தார்கள். ஆனால் ஆஸ்திரேலியா எந்த இடத்தில் மன பலத்தை இழந்து விடாமல் நின்று நிதானமாக கடைசி வரை போராடினார்கள். ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு காரணம் பாட் கம்மின்ஸ் பங்களிப்பை அளவிட முடியாதது.

ஏனென்றால் இரு போட்டிகளில் மிக மோசமான தோல்வியை தழுவி அதன் பின் அவர் வீரர்களுக்கு உறுதுணையாக நின்று இப்படி வரை அணியை வழிநடத்திச் சென்றார். இந்திய அணியா இந்தியாவின் மண்ணில் வைத்து ஒன்றரை லட்சம் மக்களுக்கு முன்பு வீழ்த்துவது என்பது எளிதான காரியம் கிடையாது. என்றும் அதை பாட் கம்மின்ஸ் செய்து காட்டியுள்ளார். ஆஸ்திரேலிய வீரர்கள் எப்போதும் உலக கோப்பை அணியின் சாம்பியனாகவே இருக்கின்றார்கள் மீண்டும் அவர்கள் சாம்பியன் என்று அவர்கள் ஆறாவது முறையாக நிரூபித்து உள்ளார்கள் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் கூறியிருந்தார்.
அதன் பின்பு இந்திய அணி நாளை மறுநாள் அதாவது நவம்பர் 23ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியை t20 போட்டியில் மோத உள்ளது. இதில் மீண்டும் சஞ்சு சம்சனுக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது அதற்கான காரணம் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. அவர் இந்திய அணியில் இன்னும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. தற்போது உலக கோப்பையில் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் அதாவது சூர்யா குமார் யாதவ் தவிர அனைத்து வீரர்களுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த அணியில் வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல் மற்றும் ரவி பிஷ்னோய் சுழற்பந்து வீச்சாளர்கள் செயல்பட உள்ளார்கள். சூரியகுமார் யாதவ், ருதுராஜ், இசான் கிஷான், திலக் வர்மா, ரிங்கு சிங் ஜிதேஷ் ஷர்மா, ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஸ்னோய், அர்ஸ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான் மற்றும் முகேஷ் குமார் என இந்திய அணி அறிவித்துள்ளது.




