நேற்று முன்தினம் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க இறுதிப்போட்டியில் இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா அணி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இதில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற ஆஸ்திரேலியா அணி இந்தியா அணியை எளிதாக வெற்றிக்கொண்டு மீண்டும் ஒருமுறை சாம்பியன் பட்டத்தை அதாவது 6 முறை கோப்பையை பெற்றது. இந்திய அணி நடைபெற்ற லீக் போட்டிகள் அனைத்திலும் மற்றும் அரையிறுதி சுற்றிலும் தொடர்ந்து வெற்றி பெற்ற இந்த இறுதி போட்டி மோதிக் கொண்டது.

ஆனால் இந்திய அணிக்கு துர்தவஷ்டமாக இறுதிப் போட்டி இந்திய அணிக்கு கைகொடுக்கவில்லை. அந்தப் போட்டியில் டாஸ் ஆஸ்திரேலியா அணி முதலில் பௌலிங் தேர்வு செய்தது. அதன் படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஒவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களை மட்டுமே குவித்து இருந்தது. ஆனால் இந்த இலக்கை ஆஸ்திரேலிய அணியின் மிக எளிதாக அடைந்தது. ஆஸ்திரேலியா அணியின் 43 ஒவர்களின் 241 ரன்களை எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.
இந்திய அணியின் தோல்வி குறித்தும் ஆஸ்திரேலியா அணியின் வெற்றியை குறித்தும் பேசிய பாகிஸ்தான அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் கூறுகையில் ஆமாம் இறுதிப் போட்டியில் தோல்வி இந்திய அணி சந்தித்திருக்கின்றது. இப்படிப்பட்ட கிரிக்கெட்டில் நடக்க செய்கின்றது. இந்தியாவுக்காக ஒரு மோசமான நாளாக இருந்தது அதுவும் இறுதி போட்டியில் அது வந்தது.

அவர்களின் கிரிக்கெட் அமைப்பு வீரர்களுக்கான பணம், நன்கு சிந்திக்கப்பட்ட திட்டங்கள் திறமையானவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் தருவது என இந்த விஷயங்களில் தொடர்ந்து செய்ய வேண்டும். இந்தியாவின் கிரிக்கெட் வாரியம் மிகவும் நல்ல இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியா 1999 ஆம் ஆண்டு உலக கோப்பையில் நான் கேப்டனாக இருந்தபோது ல போட்டிகளில் தோற்று இருந்தது ஆனால் அவர்கள் இறுதிப் போட்டியில் எங்களை சந்தித்தபோது மிகவும் வித்தியாசமாக இருந்தார்கள் என்றும் அவர் கூறுகிறார்.
அதன் பின்பு இந்திய அணி நாளை மறுநாள் அதாவது நவம்பர் 23ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியை t20 போட்டியில் மோத உள்ளது. இதில் மீண்டும் சஞ்சு சம்சனுக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது அதற்கான காரணம் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. அவர் இந்திய அணியில் இன்னும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. தற்போது உலக கோப்பையில் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் அதாவது சூர்யா குமார் யாதவ் தவிர அனைத்து வீரர்களுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த அணியில் வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல் மற்றும் ரவி பிஷ்னோய் சுழற்பந்து வீச்சாளர்கள் செயல்பட உள்ளார்கள். சூரியகுமார் யாதவ், ருதுராஜ், இசான் கிஷான், திலக் வர்மா, ரிங்கு சிங் ஜிதேஷ் ஷர்மா, ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஸ்னோய், அர்ஸ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான் மற்றும் முகேஷ் குமார் என இந்திய அணி அறிவித்துள்ளது.



