உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் பாகிஸ்தான் vs இந்தியா உலகக்கோப்பை போட்டி நடைபெறும் போது மைதானம் ரசிகர்களால் நிரம்பி வழியும் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது. மேலும் இந்தியா கடந்த உலககோப்பை போட்டிகளில் தோல்வியை தழுவியதால் இந்த முறையாவது இந்தியா வென்றிபெற்று கோப்பையை வெல்லும் என்று முனைப்பில் இந்திய அணியின் நிர்வாகம் பல முக்கியமான முடிவுகளை எடுத்து வருகிறது.

அப்படிப்பட்ட நிலையில் தான் ஆகாஷ் சோப்பரா தன்னுடைய யுடியூப் பக்கத்தில் பதிவில் இந்த உலக கோப்பை போட்டியில் இந்தியாவிற்கு இருக்கும் சிக்கல்களையும், பாஸ்கிதான் vs இந்தியாவிற்கு எதிராக நடக்கும் போட்டி குறித்தும் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் “2023 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா vs பாகிஸ்தான் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 50 ஓவர் போட்டியானது நடைபெற இருக்கிறது. இது கண்டிப்பாக இதயத் துடிப்பை சிறிது நேரம் நிறுத்திவிடும் அளவிற்கு இருக்கும். ஏனென்றால் அந்த மைத்தனத்தில் உள்ள 1.25 லட்சம் பார்வையாளர்கள் கர கோஷங்களை எழுப்புவார்கள். அந்த நிகழ்வு ஒரு சுவாரஸ்யமான சந்திப்பாக இருக்கும். இது சரியான பிளாக்பஸ்டர் விஷயம் என்றார் ஆகாஷ் சோப்ரா.

வரும் அக்டோபர் 8 ஆம் தேதி பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ளது. இதனால் இந்திய அணி தங்களுடைய ஒரு நாள் உலககோபப்பை தொடரை தங்ககளை உலகக்கோப்பை டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் தோற்கடித்த இந்தியா தனது உலகக் கோப்பைப தொடரை ஆரம்பிக்க இருக்கிறது. இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 12 உலகக் கோப்பை ஆட்டங்களில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளதால், இந்தியாவிற்கு இது ஒரு கடினமான போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த பிரச்னை ஒரு புறம் இருக்க மறுபுறம் மழையால் ஆட்டம் பாதிக்கப்படலாம் என ஆகாஷ் சோப்ரா அச்சம் தெரிவித்துள்ளார். “இந்தியாவின் முதல் போட்டி அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட இருக்கிறது. ஆனால் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சென்னையில் மழை பெய்கிறது. இதனால் சென்னை போட்டிகள் மழை பாதிக்கப்படலாம் என்பதால் நான் கொஞ்சம் பயப்படுகிறேன் என்றார்.
மேலும் உலகக்கோப்பை தொடரில் டெல்லியில் நடக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் இரண்டாவது ஆட்டத்தைப் பற்றி பேசிய சோப்ரா, ரஷித் கான் மற்றும் நூர் அகமது போன்றவர்கள் இந்திய அணிக்கு சில சிக்கல்களை ஏற்படுத்துவார்கள். ஆனால் எல்லாவற்றையும் மீறி இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதை நீங்கள் காண்பீர்கள் என்றார் ஆகாஷ் சோப்ரா.




