
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் முதல் டெஸ்ட் போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள உப்பிலி மைதானத்தில் கடந்த 25 ஆம் தேதி அன்று நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தது. ஆனால் அவர்களுக்கு முதல் இன்னிங்க்ஸ் சரியாக அமையவில்லை. அதில் இந்திய அணியின் ஆதிக்கம் தான் அதிகம் இருந்தது என்று சொல்லலாம்.

முதல் இன்னிங்க்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களை மட்டுமே இங்கிலாந்து அணி அடித்திருந்தது. அதில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 70 ரன்களும் ஜானி பேர்ஸ்டோ 37 ரன்களும் டக்கட் 35 ரன்கள் அடித்து இருந்தனர். இந்தியா அணியின் சார்பில் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளையும் ஜடேஜா மூன்று விக்கட்டுக்களையும் பும்ரா 2 மற்றும் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளை இங்கிலாந்து அணியை சுருட்டி இருந்தனர்.

அதன்பின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பாக விளையாடி இருந்தனர். முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 436 ரன்களை குவித்து இருந்தது. இதில் இந்திய அணி அதிகபட்சமாக ஜடேஜா 87 ரன்களும் கேஎல் ராகுல் 86 ரண்களும் ஜெய்ஸ்வால் 80 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களை சிதறடித்திருந்தனர். 190 ரன்களை முன்னிலையில் இந்திய அணி இன்னிங்க்சை நிறைவு செய்து இருந்தது.
அதன் பின் இரண்டாவது இன்னிங்க்ஸில் தங்களது பேஸ்பால் ஆட்டத்தை இந்த போட்டியில் அவர்கள் நிரூபித்தனர். நாளில் அதாவது இன்று அவர்கள் 420 ரன்கள் குவித்து விருந்தினர். அதில் அதிகபட்சமாக போப் 196 ரன்கள் டக்கெட் 47 ரன்களும் டாம் 34 ரன்கள் அடித்து தங்களது வழக்கம் போல் கூறிவரும் போஸ்பால் ஆட்டத்தை இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியிருந்தனர். இந்திய அணியின் சார்பில் பும்ரா நான்கு விக்கெட்டுகளையும்,

அஸ்வின் மூன்று விக்கெட்டுகளையும் ஜடேஜா இரண்டு விக்கெட்களையும் அக்சர் பட்டேல் ஒரு விக்கெட்டையும் வைத்து இருந்தனர். எனவே இந்திய அணிக்கு 230 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து அணி. தற்போது இந்திய அணி ரோஹித் ஷர்மா மற்றும் ஜெயஸ்வால்லின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்து விளையாடி வருகின்றனர்.





