ஐபிஎல் 2023 லீக் போட்டிகளில் 56 போட்டியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பௌலிங்கை தேர்வு செய்தார். அதன் படி களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் அணிக்கு ரன்களை சேர்க்க திணறியே வந்தனர்.

ராய் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க கூர்பாஸ் 18 ரன்களில் வெளியேறினார். அதன் பின் வந்த ராணாவும் 22 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அதன் பிறகு வந்த வெங்கடேஷ் ஐயர்நிதானமாகவே விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 42 பந்துகளில் 52 ரன்களை எடுத்து இருந்த போது சஹல் சுழலில் சிக்கி வெளியேறினார். இந்நிலையில் 20 வது ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து நிலையில் 149 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.
விதை போட்ட ராணா :
இதனையடுத்த 150 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே சிறப்பாக விளையாடியது. கொல்கத்தா மைதானத்தில் இந்த மெதுவான ஆடுகளத்தில், KKR இன் பேட்ஸ்மேன்களால் சிறப்பாக எதுவும் செய்ய முடியாத நிலையில், யசஸ்வி ஜெய்ஸ்வாலின் ஆட்டம் அனல் பறந்தது. அதற்கு விதை போட்டது நிதிஸ் ராணா. இவர் வீசிய ஓவரில் ஜெய்ஸ்வால் 26 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றார்.

இதையடுத்து அவர் அதிரடியாக பேட்டிங் செய்யத் தொடங்கினார். மேலும் இந்தப் போட்டியில் ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் ஐபிஎல் வரலாற்றில் அதிவேக 50 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் 98 ரன்கள் குவித்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 13.1 ஓவர்களில் வெற்றி பெற்றது.
ராணா கொடுத்த பேட்டி :
ஜெய்ஸ்வாலின் இன்னிங்ஸை நாம் கண்டிப்பாக பாராட்ட வேண்டும். அவர் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கக்கூடிய நாளாக இது இருந்தது. டாஸ் போடும் போது நான் சொன்னது போல் இது 180 ரன்கள் எடுக்கும் விக்கெட் தான். எங்கள் பேட்டிங் நன்றாக இல்லை அதற்கு பலன் தான் இந்த இரண்டு புள்ளிகள் குறைவாக எடுக்க காரணம். அதனால் நாங்கள் போட்டியில் தோல்வியடைந்தோம்” என்றார்.

மேலும் பேசிய ராணா கூறுகையில் “ஜெய்ஸ்வால் இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். அதனால் ஒரு பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் அவரை நிலைகுலைய செய்யலாம் நினைத்தேன். அதுதான் திட்டம், ஆனால் அவர் அற்புதமாக விளையாடினார் என்று தெரிவித்தார் நிதிஷ் ராணா.





