
இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் உலக கோப்பை 2023 இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் தற்போது 5 தொடர்களைக் கொண்ட டி20 போட்டிகளில் இந்தியா அணி தற்போது விளையாடி வருகிறது. அதில் நேற்று முன் தினம் நான்கு போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இந்திய அணி மூன்றில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது. ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணி 20 அவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் மட்டுமே குவித்திருந்தது. இந்திய அணி அதிகபட்சமாக ரிங்கு சிங் 46 ரன்களும் ஜெயஸ்வால் 37 ரன்களுக்கும் ருதுராஜ் கெய்க்வாட்32 ரன்களுக்கு மட்டும் எடுத்து வெளியேறினார். இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னில் ஆட்டமிருந்து வெளியே அனுப்பி ஏமாற்றத்தை அளித்தார். உலக கோப்பை போட்டிக்குப் பிறகு அணிக்கு திரும்பிய ஷ்ரேயஸ் ஐயரும் பெரிதாக ஜொலிக்கவில்லை.
எனவே இந்தியா 174 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. ஆஸ்திரேலியா அணியின் சார்பில் பென் துவர்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளையும் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் மற்றும் சங்கா இரண்டு விக்கெட்டுகளையும் ஆரோன் ஹார்டி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். 175 ரன்கள் இலக்காக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலியா ஆரம்பத்தில் இந்திய அணி வீரர்களுக்கு சற்று பயத்தை தந்தது. இருப்பினும் இந்திய அணி இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 20 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணியின் சார்பில் அதிகபட்சமாக வேட் 36 ரன்களுக்கும் ஹெட் 31 ரன்களும் ஷார்ட் 19 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இந்திய அணி சார்பில் அக்சர் பட்டேல் மூன்று விக்கெட்டுகளையும் தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும் ஆவேஷ் கான் மற்றும் ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டை இருந்தனர் எனவே இந்திய 20 ரன்களுக்கு வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது இந்திய அணி.
நேற்று முன்தினம் நடந்த போட்டியில் ரின்கு சிங் மற்றும் ஜிதேஷ் ஷர்மா சிறப்பாக இருவரும் இணைந்து இந்திய அணிக்கு ரண்களை குவித்து வந்தனர். இவர்கள் இருவரும் 13.3 ஓவர்களில் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணி வீரர்களின் 18. 3 ஓவர்கள் வரை விளையாடினார்கள். இவர்கள் இருவரும் 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். ரின்கு சிங் 46ரன்னும் ஜிதேஷ் சர்மா 35 ரன்கள் எடுத்திருந்தனர். இது இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமாக அமைந்தது.
Secret behind the giant six 😎
— BCCI (@BCCI) December 2, 2023
Roaring Raipur crowd 🔥
Adding calmness to the partnership 👏
On the mic with Rinku Singh & Jitesh Sharma 👌👌 – By @28anand
Watch the full Video 🎥🔽 #TeamIndia | #INDvAUS https://t.co/lc8Dfk7hI7 pic.twitter.com/RHaXeFnsmP
ரின்கு சிங்கின் அதிரடி ஆட்டத்தை பார்த்து ஜிதேஷ் சர்மா கூறுகையில் இது உங்களின் முதல் தொடர்பாக எனக்கு தெரியவில்லை நீங்கள் பேட்டிங் வரும்பொழுது நான் மிகவும் அழுத்தத்தில் இருந்தேன். நீங்கள் மிகவும் அமைதியாக இருந்து பந்து சரியாக அடித்து ரன்களை குவித்தனர் என்றும் அவர் கூறினார். மேலும் ரின்கு சிங்கிடம் நீங்கள் எப்படி இது போன்று பெரிய சிக்சர்களை அடிப்பது என்று ஜிதேஷ் ஷர்மா கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளித்த ரின்கு நல்ல உணவை உண்பதும், பளு தூக்குவதும் எனக்கு இதுபோன்ற சக்தியை கொடுக்கின்றது இதனால் தான் நான் பெரிய சிக்ஸர்களை அடிக்கின்றேன் என்றும் அவர் கூறியிருந்தார்.





