
உலகக்கோப்பை 2023 ல் இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தாலும் இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அடுத்த டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. கடந்த சில மாதங்களாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியின் ரசிகர்கள் எதிர்பாரத நிலையில் ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டியில் வெற்றி கோப்பையை கைப்பற்றியது.

இந்திய அணியின் தோல்விக்கு பிறகு ஆஸ்திரேலியா அணியுடன் ஐந்து டி20 தொடர்களை விளையாடி அதில் இந்திய அணி 4-1 என்று வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு ரின்கு சிங் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். இதில் இந்திய அணியின் கேப்டனாக சூரியகுமார்யாதவ் செயல்பட்டு இருந்தார். இந்திய அணி தற்போது அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை 2024 ஆம் ஆண்டுக்கு இந்திய அணியின் இளம் வீரர்களை தயார்படுத்தி வருகிறது.

இதில் இந்திய அணியின் இளம் வீரர்கள் சிறப்பாகவே செயல்பட்டு தங்களது இடத்தை உறுதிப்படுத்திவருகின்றனர். இந்திய அணியில் ருதுராஜ், ஜெய்ஸ்வால், ஜிதேஷ் ஷர்மா மற்றும் ரின்கு சிங் சிறப்பாகவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். எனவே இவர்களுக்கு இன்று நடக்க வுள்ள போட்டியில் கட்டாயம் அணியில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில் ரின்கு சிங் மற்றும் ஜிதேஷ் ஷர்மா இருவரும் தற்போது மாநில அணி மற்றும் ஐபிஎல் போட்டிகளில் எந்த இடத்தில் விளையாடினர்களோ அவர் அந்த இடத்தில் தான் இன்றும் விளையாடுவார்கள் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். அவர்கள் அந்த போட்டிகளில் எப்படி செயல்பட்டார்களோ அதே போல் இங்கும் செய்தால் போதும். அவர்கள் வேறு எதையும் வித்தியாசமாக செய்ய வேண்டாம்.

அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டிகளிலும் அவர்கள் இதை தான் செய்தார்கள். இந்திய அணி சிக்கலில் இருந்த போது எல்லாம் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு இருந்தனர். அணியின் தேவைக்கு ஏற்ப அவர் சரியாக விளையாடினார்கள். இந்த இரண்டு வீரருக்கும் நான் இதை பற்றி தான் சொன்னேன். முதலில் அணிக்காக யோசனை செய்து விளையாடுங்கள், அதன் பின் உங்களுடைய சாதனை பற்றி யோசிக்கலாம். அவ்வாறு செய்தால் தான் சூழ்நிலை சரியாகும் என்றும் அவர் கூறி இருந்தார்.





