ரிச்சர்ட் கெட்டில்பரோ தான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்றும் மைக்கல் வாகன் கருத்து கூறியிருந்தார். சமீபத்தில் நடைபெற்ற முடிந்த உலக கோப்பை 2023 இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில்இந்திய அணி தோல்வி தழுவியது. இந்திய இந்த உலகக் கோப்பை முழுவதும் பலம் வாய்ந்த அணியாக விளையாடியது லீக் போட்டிகள் மற்றும் அரை இறுதிப்போட்டி என அனைத்திலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டி வரை சென்றது. ஆனால் அந்த போட்டியில் இந்திய அணி எதிர்பார்க்காத விதமாக ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியைத் தழுவியது.

இந்தியாவால் இறுதிப் போட்டியில் மொத்தம் 240 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. விராட் கோலி, கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் ஷர்மாவின் அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்து இருந்தபோதிலும், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் ஒரு வலிமையான சக்தியாக நிரூபிக்கப்பட்டனர். இருப்பினும், இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் அதிரடியாக 137 ரன்களை குவித்து இந்தியாவிடம் இருந்து ஆட்டத்தை திசை திருப்பினார்

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான இறுதிப் போட்டியில் வீழ்த்தியது கள நடுவர் தான் என்று முன்னால் இங்கிலாந்து வீரரும் இங்கிலாந்து அணியின் கேப்டன் மைக்கேல் வாகன் கருத்து கூறியுள்ளார். உலகக் கோப்பை இறுதி போட்டி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 241 ரன்கள் இலக்காக நிர்ணயித்திருந்தது. அந்தப் போட்டியில் ட்ராவிஸ் ஹெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை இறுதிப் போட்டியில் வீழ்தியது.
இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் தவித்து வந்தனர். அப்போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு பந்து வீச கொடுத்து இருந்தார் அப்போது அவர் வீசியப்பந்து லம்புஷேனன் காலில் பட்டது. அதற்கு இந்திய அணி வீரர்கள் LBWக்கு கள நடுவரிடம் அவுட் கேட்டு இருந்தனர். ஆனால் அதற்கு களநடுவர் அவுட் தரவில்லை. எனவே இந்திய அணி Review செய்து இருந்தது.

ஆனால் அது அம்பயர்ஸ் கால் என்று வந்தது. களநடுவர்அவுட் கொடுத்து இருந்தால் அதனை ஆஸ்திரேலியா அணி Review செய்து இருந்தால் அது அம்பையர்ஸ் கால் என்று வந்து இருக்கும் அப்போது அவர் அவுட்டாகி வெளியேறி இருப்பார். இந்த அம்பையரின் முடிவு இந்திய அணிக்கு எதிராக அமைந்தது. இது குறித்து கருத்து கூறியிருந்த மைக்கல் வாகன் கூறுகையில் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவ நட்சத்திர வீரர் களநடுவர் மட்டும் மட்டுமே காரணம் என்றும் அவர் அதற்க்கு கை தூக்கியிருந்தால் போட்டியில் முடிவுகள் மாறி இருக்கும் என்றும் மைக்கல் வாகன் கூறியிருந்தார்.



