
உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவி இருந்த நிலையில அதன் பின்னதாக ஆஸ்திரேலிய அணி ஐந்து தொடர் கொண்ட டி20 போட்டியில் மோதியது. அதில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதற்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்ற தென் ஆப்பிரிக்கா அணியை மூன்று வடிவ போட்டிகளிலும் இந்திய அணி விளையாட உள்ளது. அதில் தற்போது இந்திய அணி முதலாவது கட்டமாக 3 தொடர்களை கொண்ட t20 போட்டியில் விளையாடி வருகிறது.

அதில் முதல் போட்டி நேற்று முன்தினம் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்னும் மிஞ்சி இருக்கும் இரண்டு போட்டிகளில் எந்த அணி வெற்றிப்பெறுகிறதோ அதுதான் இந்த தொடரில் வெற்றி பெற்றது என்று கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதில் நேற்று இரண்டாவது போட்டியை தென்னாப்பிரிக்கா அணியும் இந்திய அணியும் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது. ஆரம்பத்தில் தென்ஆப்பிரிக்கா அணி ஆதிக்கத்தை செலுத்தியதால் இந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்தது விக்கெட்டுகளை இழந்தனர்.
குறிப்பாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெயஸ்வால் மற்றும் கில் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றத்தை அளித்தனர். இருப்பினும் கேப்டன் நிதானமான ஆட்டத்தால் இந்திய அணி 19.3 ஓவர்கள் 180 முடிவில் ரன்களை குவித்திருந்தது. இந்தியா அணியின் அதிகபட்சமாக ரிங்கு சிங் 68 ரன்களும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 56 ரன்களும் ஜிதேஷ் வர்மா 29 ரன்களையும் குவித்து இருந்தனர் . எனவே இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை குவித்தது.

மழை குறிக்கிட்டதால் DLS முறைபடி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 152 ரன்களை இலக்காகக் நிர்ணயிக்கப்பட்டது. தென்னாபிரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென்னாபிரிக்கா அணியின் அதிக பட்சமாக ஹென்ட்ரிக்ஸ் 49 ரன்களுக்கும் மார்க்ரம் 16ரன்களும் மில்லர் 17ரன்களும் அடித்து இருந்தனர். இந்திய அணியின் சார்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளையும் தென்னாபிரிக்கா அணி வெற்றி குல்தீப் மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். எனவே தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
“பவர்பிளேயில் நாங்கள் கொஞ்சம் கூடுதல் ரன்கள் கொடுத்தோம் என்று நான் உணர்கிறேன். ஆனால் அதன் பிறகு நாங்கள் வலுவாக திரும்பி வந்தோம். ஆனால் ஈரமான அவுட்பீல்டு காரணமாக, பந்து நாங்கள் நினைத்த அளவுக்கு பிடிக்கவில்லை. ஆனால் உண்மையில், நாங்கள் நன்றாக பேட்டிங் செய்தோம். தென்னாப்பிரிக்காவில் விளையாடுவது எப்போதுமே நல்லது; இது மிகவும் சவாலானது. இந்த நிலைமைகளுக்கு நாங்கள் நன்கு தயாராக இருக்கிறோம், மேலும் கடினமான சூழ்நிலையில் நாங்கள் உண்மையில் நன்றாக பேட்டிங் செய்துள்ளோம்.
தொடக்க ஆட்டக்காரர்கள் இன்று சிறப்பாகச் செயல்படவில்லை, ஆனால் அதன் பிறகு சூர்யா, நான் மற்றும் பேட்டிங் தரப்பில் ரிங்குவுக்கு நல்ல ரிதம் கிடைத்தது, நாங்கள் நன்றாக ஸ்கோர் செய்தோம். நாங்கள் பேட்டிங் செய்யும் போது விக்கெட் சற்று மெதுவாக இருந்ததாக நான் உணர்கிறேன் இல்லையெனில், நாம் 200 அல்லது 200-க்கு மேல் எட்டியிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.





